விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்ண வானவர் கோனுக்கு*  ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்* 
    வண்ண மால் வரையை எடுத்து*  மழை காத்தலும்* 
    மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து*  கடந்து இடந்து மணந்த மாயங்கள்* 
    எண்ணும்தோறும் என் நெஞ்சு*  எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் கோனுக்கு உண்ண - தேவேந்திரனுடைய ஆராதனைக்காக
ஆயர் ஒருப்படுத்த - இடையர்கள் ஸந்நாஹஞ் செய்த
அடிசில் உண்டதும் - ப்ரஸாதங்களையெல்லாம் தானே அமுதுசெய்தலும்
வண்ணம் மால்வரையை எடுத்து மழை காத்தலும் - அழகிய பெருமலையைக் குடையாக வெடுத்து மழையைத் தடுத்தும்
மண்ணை முன் படைத்து - பூமியை ஆதிகாலத்திலே ஸ்ருஷ்டித்து

விளக்க உரை

(உண்ணாவானவர்.) திருவாய்ப்பாடியில் இடையர்கள் வழக்கப்படி தேவேந்திர ஸமாராதனைக்கென்று* அட்டுக்குருவி சோற்றுப்பருப்பதமும் தயிர்லாயும் நெய்யளறுமாகச் சேமித்து வைக்க ‘அஹம் கோவர்த்தகோஸ்மி” என்று சொல்லி அவற்றையடங்கலும் அமுது செய்ததும், உடனே பசிக் கோபத்தாலே இந்திரன் விடாமழைபெய்விக்க, கோவர்த்தனமலையை குடையாக வெடுத்து ஒருவர்மேல் ஒரு மழைத்துளி விழாதபடி காத்ததும், உலகங்களைப் படைப்பது, பிரளயகாலத்திலே உண்பது, பிரளயம் உண்பது, பிரளயம் நீங்கினவாறே உமிழ்வத மாவலியின் கொழுப்டக்கி அளப்பது வராஹாவதாரமெடுத்து இடந்து மணப்பது ஆகிய இவையும் ஒவ்வொன்றும் சிந்திக்கும் போதெல்லாம் என்மணம் நெருப்பிலேபுக்க மெழுகுபோலே முடியாதே நின்று உருவாகின்றதே!

English Translation

Your wonderful acts, of gulping the food-offerings kept for Indra, then holding aloft the mountain to stop the angry rains, your creating the worlds, then swallowing and bringing them out, your measuring the Earth, your marrying Dame-Earth, -all these melt my heart like wax in fire.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்