விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்ள வேடத்தைக் கொண்டு போய்*  புரம்புக்க ஆறும்*  கலந்து அசுரரை- 
    உள்ளம் பேதம் செய்திட்டு*  உயிர் உண்ட உபாயங்களும்* 
    வெள்ள நீர்ச் சடையானும்*  நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்* 
    உள்ளம் உள் குடைந்து*  என் உயிரை உருக்கி உண்ணுமே*.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள்ளம் வேடத்தை கொண்டுபோய் - வேதபாஹ்ய புத்தரூபவேஷத்தைப் பரிந்ரஹித்து
புரம் புக்க ஆறும் - திரிபுரத்திலே ப்ரவேசித்தபடியும்
அசுரரை கலந்து- அசுரரோடே செறிந்து
உள்ளம் பேதம் செய்திட்டு- மன வேறுபாட்டையுண்டாக்கி
உயிர் உண்ட உபாயங்களும் - அவர்களுடைய உயிரைக் கவர்ந்த விரகுகளும்

விளக்க உரை

(கள்ளவேடத்தை.) பௌத்தாவாதார கதையைப் பேசி இப்படியும் ஒரு கள்ளவேடம் கொள்வதுண்டோ வென்று உருகுகிறார். அக்கதை வருமாறு:- சில அசுரர்கள் சிவபெருமானை நோக்கித் தவம்புரிந்தார்கள். அப்போது சிவன் ப்ரத்யக்ஷமாகி உவந்து’ உங்களுக்கு என்ன வேணும்?’ என்று கேட்க, அவர்களும் ‘ஒருவராலும் வெல்லமுடியாத மூன்று பட்டணங்கள் எங்களுக்கு வேணும்’ என்ன, அதற்குச் சிவபிரான் “அப்படியே யுண்டாகுக, அந்தப் பட்டணங்கள் மூன்றும் ஒன்றொடொன்று கூடாமல் திரியக் கடவன; மூன்றும் ஓரிடத்திலே கூடுகிறபோது உங்களுக்கு மஹத்தான ஆபத்து விளையும், பேணிக்கொள்ளுங்கோள்” என்று சொல்லி மறைந்து போயினன். பின்பு இரும்புக் கோட்டையாயும் வெள்ளிக்கோட்டையாயும் பொற்கோட்டையாயுமிருந்த மூன்று பட்டணங்கள் உண்டான. அசுரர்கள் அவற்றிலே யிருந்துகொண்டு தேவர்களையும், அவர்களை நோக்கி வேள்யி புரிகின்ற அந்தணர்களையும் பலவாறு நலிந்து கொண்டிருந்தனர். யாகம் முதலிய நடைபெறாமையினாலே ஹவிஸ்ஸுகிடைக்காமற்போகவே தேவர்களுக்கு வலியொடுங்கிற்; மிகவும் கஷ்டமாயிற்று. பிறகு பிரமன் முதலியோர் அனைவருங்கூடி சிவனருகிற்சென்று ‘பெருமானே! எங்களுக்கு ஹவிர்ப்பாகம் இல்லாமற்போயிற்று; யாகம் நடத்துகிற வூர்களிலே அசுரர்கள் அந்தப் பட்டணங்களோடே சென்றிருந்து நலிகின்றார்கள்; இத்துன்பம் பொறுக்க முடியாதிருத்தலால் அவர்களை உடனே ஸம்ஹரிக்கவேணும்’ என வேண்டிக் கொண்டார்கள். அதற்குச் சிவபிரான் “நச்சுமரமாகிலும் ஈட்ட மரங்களை வெட்டுவாருண்டோ? அவர்களை ஸம்ஹரிக்க என்னாலாகாது” என்ன, பிறகு அனைவரும் திருப்பாற்கடலிற்சென்று பரமபுருஷனைத் துதிக்க, திருமால் கருடன்மீது காட்சிதந்து, வந்த செய்தி என்னவென்று விசாரிக்க, இவர்களும் செய்தியைச்சொல்ல, “நீங்களெல்லாருங்கூடி அவர்களை ஸம்ஹரிக்கலாகாதோ?” என்று திருமால் கேட்க, “அந்த அவரவர்கள் தாங்கள் சில தருமங்களை யனுஷ்டிப்பது, சில யாகங்கள் பண்ணுவதாய் இப்படிச் சில தர்மச்ரத்தையைக் காட்டுகிறார்களாகையால் அவர்களை எங்களால் வெல்லப்போகாது” என்று தேவர்கள் சொல்ல. அதற்கு திருமால் ‘ஆனால் அவர்களை நான் சிரஸிக்கிறேன்.

English Translation

The mat-haired Siva entering stealthily into the cities of Asuras disguised, striking terror in their hearts, destroying them by the score, then entering into your person indistinguishably, -these enter my heart, melt and drink soul!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்