விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்* 
    ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*
    மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாவை கல்லீல் - பாவைபோலே அழகிய தோழிகளே!
ஓதம் நெடு நடத்துள் - கடல்போன்று பெரிய தடாகங்களுக்குள்ளே
உயர் தாமரை செங்கழுவீர் - உயர்ந்த தாமரைப் பூக்களும் செங்குழுநீர்ப்பூக்களும்
மாதர்கள் வான் முகமும் கண்களும் ஏந்தும் - ஸ்திரீகளின் ஒளிபொருந்திய முகத்தழகையும் கண்ணழகையும் தாக்கும்படியான
காதல் - தலைவனும்

விளக்க உரை

(பாதங்கள் மேலணி.) இப்பாட்டில் பாவைநல்லீர்! என்று தோழிகளை உகந்து விளித்திருக்கின்றன; ஆறாயிரப்படி யருளிச்செயல். ‘தன் மநோரதத்தை நிஷேதியாமையாலே தோழிமாரை உகந்து ஸம்போதிக்கிறாள்” என்று ஈட்டு ஸூக்தி- “இவளை கிஷேதிக்கு க்ஷமைகளன்றிக்கே ஸ்திமிதைகளா யிருந்தபடி; எழுதின பாவைபோலேயிருந்தார்கள்” என்று கடல் போலே பெருத்திருந்துள்ள பொய்கைகளிலே வளர்ந்த தாமரைப்பூக்களும் சென்கழுநீர்ப் பூக்களும் ஸ்த்ரீகளுடைய அழகிய முகங்களோடும் கண்களோடும் ஒக்கும்படியாகவுள்ள திருவள்ளவாழ்நகருக்கு நாயகனாய் ஸமயசேஷங்களிலே ஸகல ஜகத்துக்கும் ரக்ஷகனானவனுயைட திருவடிகளிலே சாத்தின புஷ்பத்தையாகிலும் ஸேவிக்கப்பெறுவோமோ வென்கிறாள்.

English Translation

God Sakhis! The Lord, our master who swallowed the Universe, resides in Tiruvallaval, where water-lily and lotus grow tall in large water tanks, and reach the radiant eyes and faces of the women-talk, Alas! When will I worship his feet with flowers everyday?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்