விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்*  நான்முகனும் முறையால்* 
    சீரேறுவாசகஞ்செய்யநின்ற*  திருமாலைநாடுதிரேல்*
    வாரேறுகொங்கை உருப்பிணியை*  வலியப்பிடித்துக்கொண்டு- 
    தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்*  சிக்கெனக்கண்டார்உளர்.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

 
நீர் - (எம்பெருமானது  ஸ்ரீபாத) தீர்த்தமானது
செம்சடை - சிவந்த ஜடையையுடைய
நீலகண்டனும் - (விஷமுடையதனால்) கறுத்தமிடற்றை யுடையவனான சிவபெருமானும்.
நான்மகனும் - சதுமுகப்ரஹ்மாவும்
முறையால் - (சேஷசேஷி பாவமாகிற) முறையின்படி

விளக்க உரை

திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற்கென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளங்க, அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாய கங்காநதியை, ஸூர்யகுலத்துப் பகீரத சக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணில் கோபத்தீக்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையரான ஸகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறவிருக்கும் பொருட்டு நெடுங்காலந் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொணர்கையில், அவனது வேண்டுகோளாற் சிவபிரான் அந்நதியை முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டருளினன் என்ற வரலாற்றை உட்கொண்டு, நீரேறு செஞ்சடை நீலகண்டன் என்றார். சீரேறு வாசமக்- எம்பெருமானுடைய கல்யாணகுணங்களைச்சொல்லிப் புகழும்படியான வாக்கியங்கள் என்றுமாம். பின்னடிகளிற் குறித்த வரலாற்றின் விவரணம், கீழ் “ என்னாதன்றேவிக்கு” என்ற திருமொழியின் மூன்றாம் பாட்டின் உரையிற் காணத்தக்கது. சிக்கன- ஐயத்திரிபற என்றபடி.

English Translation

Are you a search of the Lord Tirumal whom the fore-faced Brahma and the blue-throated Siva worship with proper chants? There are many who definitely saw him, when he grabbed the corseted Rukmini and road away with her in his chariot, fighting back his detractors fiercely.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்