விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரிஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
    எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*
    பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
    தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏன் - நான் அனுபவித்தற்குரிய
அம் பொன் சுடரே - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே!
செம் கண் கரு முகிலே - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே!
எரி ஏய் பவளம் குன்றே - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே!
நால் தோள் எந்தாய் - சதுர்ப்புஜ ஸ்வாமியே!

விளக்க உரை

(அரியேறே.) பிரானே! உன்னுடைய வைலக்ஷண்யத்தை நீயே காட்டித்தந்து அடிமையிலே என்னை ஊன்றவைத்தாயானபின்பு உன் திருவடிகளைத்தந்து தீரவேணுமன்றோ; தந்து பின்னை ஸம்ஸாரத்தைக் களைந்தொழியாய் என்கிறார். மேனாணிப்புத்தோற்ற விருக்குமிருப்பை அரியேறே! என்ற விளி காட்டும். அந்த மேனாணிப்புக்குத் தகுதியான வடிவுபடைத்தவ னென்கிறது அம்பொற்சுடரே! என்பது. விலக்ஷயமான பொன்போலே ஸ்ப்ருக்ஷணீணமான ஒளியையுடையவனே! என்றபடி. வடிவின் புகரைக்காட்டி என்னை யீடுபடுத்திக்கொண்டவனே! என்றவாறு. செங்கட்கருமுகிலே! - வாத்ஸல்யமாகிற அம்ருதத்தை வர்க்ஷிக்கிற திருக்கண்களையுடையவனே! என்றபடி. எரியேபவளக்குன்றே! = எரியென்று கேட்டை நக்ஷத்திரத்திற்கு வாசகமாய் நக்ஷத்ரஸாமாந்யத்தைச் சொல்லி நிற்கும். நக்ஷத்ரமண்டலத்ளைவும் ஓங்கியிருக்கிற பவளக்குன்றபோலே (பவழமயமான மலைபோலே) விலக்ஷணமான வடிவு படைத்தவனே! உகவாதார்க்கு அபிபவிக்க வொண்ணாமையும் உகந்தார்க்குப் பரமபோய்னாயிருக்கையும் இத்தாவல் நினைக்கிறது. நால்தோளெந்தாய்! = கல்பகதரு பணைத்தாற்போலேயிருக்கிற திருத்தோள்களைக்காட்டி என்னை அநந்யார்ஹ சேஷப்படுத்திக் கொண்டவனே! என்கை. எம்பெருமானுடைய திருத்தோள்கள் நம்மாழ்வாருடைய திருவாக்கில் நுழைந்து புறப்பட்டவாறே விலக்ஷணமான வொருபெருமைபெறும். ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில்.

English Translation

O King-of-lions, golden radiance, red-eyed cloud-hued Lord! O Dazzling coral-mountain, my Lord of four arms, Lord in Kudandai! Through your grace, you made me your bonded sert. Now give me your protection and rid me of my birth. No more I can bear this.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்