விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடிசேரும்- 
    ஊழ் கண்டிருந்தே*  தூராக்குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*
    வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
    யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமுதே - அமிருதம் போன்றவனே!
அறிவின் பயனே - அறிவுக்கும் பலனானவனே!
அரி ஏறே - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே!
உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும்
தூரா குழி தூர்த்து - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு

விளக்க உரை

(சூழ்கண்டாய்.) பிரானே! உன்னுடைய போக்யதையிலே அகப்பட்டிருந்துள்ள வெனக்கு ஓர் உபகாரம் செய்தருளவேணும்; உன்னைப் பெறுதற்கு இடையூறான தொல்லைவினைகளை யெல்லாம் தொலைத்தருளி உன்னைப் பெறுவதொரு நல்விரகு பார்த்தருள வேணும் என்கிறார். நீ எழுந்தருளியிருக்கு மிடமான திருக்குடந்தையானது சிறந்த கீர்த்தியையுடையவர்களான மஹான்கள் வர்த்திக்கும்படியானது; அவர்களுடைய கீர்த்தியாதென்னில்; உன்னைப் பெறுதற்கு விரோதியான கரும் பந்தங்களெல்லாம் கழியப்பெற்றவர்கள் உன்னுங் கீர்த்தியாம்; அத்தகைய கீர்த்தி வாய்ந்தவர்கள் வாழுமிடத்தே நீயிருந்துவைத்து எனக்கு அந்தக் கீர்த்தியை விளைக்காதொழியத்தகுமோ? (வானோர்கோமானே!) நித்யர்களையும் முக்தர்களையும் போலே எம்மை அடிமைகொள்ள வேண்டாவோ? (யாழினிசையே அமுதே) உன்னடைய போக்யதையை நான் அறியப் பெறாதிருந்தேனாகில் இங்ஙனே கிடந்து துடிப்போனோ! யாழின் இசைதானே வடிவொடுத்தாற்போலேயன்றோ உன்னுடைய இனிமைதான் இருப்பது; அமுதமும் எனக்க நீயேயன்றோ. (அறிவின் பயனே) * ந போதாந் அபரம் ஸுகம்* என்கிறபடியே அறிவுக்குப்பலன் ஸுஸுகமாகையாலே என்னுடைய ஸுகமே வடிவெடுத்திருப்பவனே! என்றபடி. (அரியேறே) அரி - சிங்கம்; ஏறு ரிஷபம். இவ்விரண்டும் சிறப்புக்க வாசகங்கள்; ‘புருஷஸிம்ஹம்’ ‘புருஷர்ஷபம்’ என்பர்களன்ளோ? மிகச்சிறந்தவனே! என்றபடி.

English Translation

O Lord of celestials reclining in kudandai surrounded by men of evertasting glory! O Music of the Yal-harp! Ambrosial delight, fruit-of-knowledge ! O King-of-lions1 Rid me of my Karmas and find a way, you must, I long to reach you, how long must I remain here filling a bottomless pit?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்