விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
    உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 
    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
    அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செல காண்கிற்பார் - மேலே மேலே காணவல்லவர்கள்
காணும் அளவும்- எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும்
செல்லும் கீர்த்தியாய் - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே!
கிடந்தாய் - சயனித்தருள்பவனே!
நான் உன்னை காண்பான் அலப்பு ஆய் - என் உன்னைக்காண வேண்டி அமைந்து

விளக்க உரை

(செலக்காண்கிற்பார்.) பிரானே! என்போல்வார்க்காக நீ திருக்குடந்தையிலே ஸன்னிதி பண்ணியிருந்தும் நினைத்தபடி பரிமாற்றம் கிடையாமையாலே நான் நோவுபடாநின்றே னென்கிறார். முதவடியினால், நீ படைத்த புகழெல்லாம் பாழாய்ப்போகிறதேயென்று வயிறு பிடிக்கிறார். தமக்கு உதவாமையினாலே இங்ஙனே சொல்லுகிறபடி. எம்பெருமானடைய கீர்த்திகளை (அதாவது ஸ்வரூப ரூபகுணவிபூதிகளை) யார் யார் எவ்வளவு பேசுகிறார்களோ அவை அவ்வல்வளவாயிருக்கும். மந்தமதிகள் பேசப்புக்காலும் அவர்களது வாக்கிலே அடங்கி நிற்கும்; மஹாமதிகள் பேசப்புக்காலும் அவர்களது திறமைக்குத் தக்கபடி கரைகட்டாக்காவேரிபோலே பெருகிச் சென்றிருக்கும். உலப்பு இலானே! = உலப்பு-முடிவு; அந்த குணவிபூதிகளினுடைய கணனைக்கு முடிவில்லாமலிருக்குமவனே! என்றபடி. எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி! = மூர்த்தியென்று திவ்யமங்கள விக்ரஹத்துக்கம் பெயர், ஐச்வர்யத்துக்கும் பெயர்; வடிவழகைக்காட்டி. எல்லாப் பிராணிகளையும் ஈடுபடுத்திக்கொள்ள வல்லவனே! என்றும், ஸகல லோகங்களுக்கும் நிர்வாஹகனான ஸர்வேச்வரனே! என்றும் பொருள்படும். என்னை நிர்வஹியாத வுனக்கு ஸர்வேச்வரனேனென்று பெயர் தகுமாவென்று உறுத்திச் சொல்லுகிறபடி.

English Translation

O Lord of glory exceeding the grasp of ever-learning seers! Infinite Lord, your frame contains all the worlds. O Lord reclining in kudandai surrounded by men of exceeding goodness! Desirous of seeing you, I look at the sky disturbed, then weep and pray.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்