விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோயம்பரந்த நடுவுசூழலில்*  தொல்லை வடிவுகொண்ட* 
    மாயக்குழவியதனை நாடுறில்*  வம்மின்சுவடுஉரைக்கேன்*
    ஆயர்மடமகள் பின்னைக்காகி*  அடல்விடைஏழினையும்* 
    வீயப்பொருது வியர்த்துநின்றானை*  மெய்ம்மையேகண்டார்உளர். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரந்த - எங்கும் பரவின
தேயாம் நடுவு - ஜலத்தின் நடுவே
சூழலின் - உபாயத்தினால்
தொல்லை வடிவு கொண்ட - பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட
மாயம் குழலி அதனை - அந்த ஆச்சர்யக் குட்டியை

விளக்க உரை

பரந்த என்றதனபின் ‘போது’ என வருவித்து, நடுவு, சூழலில் தோயம்பரந்தபோது என இயைத்து , (சுற்றும் கடலாய்,) அதனிடையிலே உருண்டை வடிவாயிருக்கிற பூமியெங்கும் ஜலம் பரவின காலத்திலே என்றுரைக்கவுங் கூடும். இவ்வுலகத்தையடங்கலும் பிரளயவெள்ளம் வந்து மூட, அதில் ரக்ஷ்யவர்க்கம் அழியாதபடி அவற்றைத் திருவயிற்றில் வைத்து நோக்கித் தனது பெரியவடிவைச் சிறிதாகச் சுருக்கிக்கொண்டு ஒரு ஆலந்தளிரிலே எம்பெருமான் சிறுகுழந்தைபோலத் துயின்ற வரலாறு முன்னடிகளிலடங்கியது. தோயம்- வடசொல். சூழல்- உபாயம்; அதாவது- பெரியவடிவைச் சிறியவடிவாகச் சுருக்கிக் கொண்டமை. தொல்லை- ஐ விகுதிபெற்ற பண்புப் பெயர். இப்பாட்டால், ஆலிலைமேல் துயின்ற வ்யக்திக்கும் கண்ணனாய் அவதரித்த வ்யக்திக்கும் ஒற்றுமை கூறப்பட்டதாயிற்று; “வையமேழுங்கண்டாள் பிள்ளைவாயுளே” என்றும், “ஆலினிலைவளர்த்த சிறுக்கனவனிவன்” என்றும் இவ்வொற்றுமை கீழும் பலவிடங்களிலருளிச் செய்யப்படட்மை அறிக.

English Translation

If you are in search of the Lord in the middle of limitless ocean talking the undifferentiated primeval form of a wonder-child, come, I offer a clue. For the sake of the cowherd-maiden Nappinnai, he killed seven fierce bulls in a fight and stood perspiring. There are many to really saw him thus.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்