விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆறு எனக்கு நின் பாதமே*  சரண் ஆகத் தந்தொழிந்தாய்*  உனக்கு ஓர்கைம் 
    மாறு நான் ஒன்று இலேன்*  எனது ஆவியும் உனதே*
    சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்*  மலி தண் சிரீவரமங்கை* 
    நாறு பூந் தண் துழாய் முடியாய்!*  தெய்வ நாயகனே!*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேறு கொள் - சேற்று நிலங்களிலே வளர்கின்ற
கரும்பும் - கரும்புகளும்
பெரு செந்நெலும் - பெரிய செந்நெற் பயிர்களும்
மலி - மலிந்திருக்கப்பெற்ற
தண் - குளிர்ந்த

விளக்க உரை

(ஆறெனக்கு.) ஏற்கனவே தமக்குக் கிடைத்திருக்கிற அத்யவஸாப விசேஷத்திற்கு க்ருதஜ்ஞதாநுஸந்தாகம் பண்ணுகிறாரிப்பாட்டில். ஆறு என்று வழிக்குப் பெயர்; அதாவது உபாயத்தைச் சொன்னபடி. மேலே, சாணாக என்ற விடத்தில் சரண் என்ற சொல் ‘சரண்யம்’ என்ற வடசொல்லின் விகாரமாய் உபேயத்தைச் சொல்லிற்றாகும். ஆக, “எனக்கு நின் பாதமே ஆறு சரணாகத் தந்தொழிந்தாய்” என்று அந்வயித்து “ப்ராப்ய ப்ராபாங்களிரண்டும் உன் திருவடி மலர்களே யென்றிருக்கும் இவத்யவஸாதயத்தை எனக்கு ஸ்வபாவமாம்படி தந்தருளினாய்” என்றருளிச் செய்வர் பிள்ளான். பட்டர், ஆறு என்பதற்கும் சரண் என்பதற்கும் உபாயமென்கிற பொருளையே கொள்வர். உபாயப் பொருளதான சரணம் என்கிற வடசொல் சரணென்று திரிந்ததாகக் கொண்டபடி. உபாயமென்னும் பொருளிலே இரண்டு சொற்கள் கிடந்தனவாகில் எங்ஙனே அர்வயிக்கிறதென்னில்; பதவுரையிற் காண்க.

English Translation

Lord celestial, wearing a cool fragrant Tulasi wreath! Resident of cool Srivaramangala-nagar where sugarcane and paddy grow fall! You have given me your feet as my sole refuge and path. I have nothing to give in return, -my soul too is yours!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்