விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!*  எருது ஏழ் அடர்த்த*  என்- 
    கள்ள மாயவனே!*  கருமாணிக்கச் சுடரே*
    தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்*  மலி தண் சிரீவரமங்கை* 
    யுள் இருந்த எந்தாய்!*  அருளாய் உய்யுமாறு எனக்கே*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புள்ளின் வாய் பிளந்தாய் - பகாஸுரனையழித்தவனே!
மருது இடைபோயினாய் - இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்து சென்றவனே!
ஏழ் எருது அடர்ந்த - ஏழு  ரிஷபங்களையும் கலிதொலைத்தன்னாயும்
என் - என் நிறத்திலே
கள்ளம் மாயவனே - கள்ள மாயங்களைச் செய்து போருமவனே!

விளக்க உரை

(புள்ளின்வாய் பிளந்தாய்.) கீழ்ப்பாட்டில் “அகற்றியென்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்” என்னக்கேட்ட எம்பெருமான்,‘ஆழ்வீர்! உம்முடைய வினைகளாகிற பிரபல விரோதிகள் காரணாமக நீர் அருஞ்சேற்றில் விழுந்து கிடந்திராகில் இதற்கு நான் என் செய்வது? என்ன; அதற்கு ஆழ்வார், ‘பிரானே! இதற்கு மேற்பட்ட பிரபல விரோதிகளையெல்லாம் அநாயாஸமாக அழிந்திருக்கிறவுனக்கு இது ஒரு வார்த்தையோ? இப்படியும் ஒரு கள்ளத்தனமான பேச்சுண்டோ?’ என்கிறார். புள்ளின்வாய் பிளந்ததும் மருதிடை போனதும் எருதேழடர்த்ததும் க்ருஷ்ணாதாரத்திலே. பகாஸுரனிற்காட்டிலும் வலிதோ என் வினை? இரட்டை மருதமரங்களில் ஆவேசித்துக்கிடந்த அசுரரிற்காட்டிலும் வலிதோ என் வினை? நப்பின்னைப்பிராட்டியின் திருமணத்திற்கு இடையூறாய் நின்ற எருதுகளிற் நாட்டிலும் வலிதோ என் வினை? கருமாணிக்கச்சுடரே! என்பது திருமேனி யொளியில் ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தை. புள்ளின் வாய்பிளந்தது முதலிய செயல்கள் திருமேனியை ஆயாஸப்படுத்திச் செய்தவனவாகும்; அப்படி ஏதேனும் ஆயாஸப்படவேணுமோ என் வினைகளைப் போக்க? என்பது உள்ளுறை-,

English Translation

O Lord who ripped the bird's break, entered the Marudu trees, and killed the seven bulls, my wicked wonder-Lord of gem-hue radiance! Many clear-minded seers, well-versed in the Vedas, live in cool Srivaramangala-nagar, My Lord living in their midst! Pray show me the path to liberation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்