விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருளப் புள் கொடி சக்கரப் படை*  வான நாட! என் கார்முகில் வண்ணா* 
    பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி*  அடிமைகொண்டாய்*
    தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்*  சிரீவரமங்கலநகர்க்கு* 
    அருள்செய்து அங்கு இருந்தாய்!*  அறியேன் ஒரு கைம்மாறே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருளன் புள்கொடி - கருடப்பறவையைக் கொடியாகவுடையனாய்
சக்கரம் படை - திருவாழியை ஆயுதமாகவுடையனாய்
வானம் நாட - பரமபதத்தை நாடாகவுடையனான பெருமானே!
எம்கார் முகில் எள்ளு - எமக்குக் காளமேகம் போன்ற திருவுருவைக் காட்டி உபசரிக்குமவனே!
தெருள் கொள் - மிகுந்த ஞானத்தையுடையராய்

விளக்க உரை

(கருளப்புட்கோடி.) கீழ்ப்பாட்டில் *சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே* என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். ‘ஆழ்வீர்!’ அருள் செய்யவேணுமென்கிறீர்; அப்படியே அருள் செய்வோம்; அதில் ஒரு குறையில்லை; ஆனால் நாம் அருள்செய்யவேணுமானால் உம்மிடத்தில் ஏதேனும் ஒரு கைம்முதல் இருக்கவேணுமே; அப்படி ஏதேனுமுண்டாகில் சொல்லிக்காணீர்’ என்ன, பிரானே! இனிமேல் நீ செய்கிற அருள் இருக்கட்டும்; இதுவரையில் உன் பக்கலில் நான் பெற்றிருக்கிற அருள் அபஸயிக்க முடியாததன்றோ; ஒரு வஸ்துவாக எண்ணத்தகுந்தவனல்லாதபடி யிருந்தவென்னை வஸ்துவாக்கி இவ்வளவு அதிகாரியாம்படி செய்தருளினாயே! இது என் பக்கலில் என்ன கைம்முதலைக் கண்டு? கீழ்க்காலத்தில் செய்த அருள் நீர்ஹேநுகமாயிருக்கத் தடையுண்டோ? இனி அருள் செய்கிறாய் செய்யாதொழிகிறாய்; அதில் விகாரமில்லை; இதுவரை நான் பெற்றிருக்கிற அருளுக்கு என்னிடத்தில் ஒரு கைம்முதலிருந்ததாக அறிகின்றிலேனே! என்கிறார். கருளப்புள்ளை (அதாவது, கருடபக்ஷியை)க் கொடியாகக் கொண்டு, அடியவர்கள் இருந்தவிடங்களிலே சென்று சாரியஞ் செய்வாய் நீ; சில ஸமயங்களில் “கருதுமிடம் பொருது- கைவந்த சக்கரத்தன்” என்கிறபடியே திருவாழியழ்வானைப் போகவிட்டு அடியவர்வினை கெடுப்பாய், திருநாட்டிலே சீரிய சிங்காசனத்திலேயெழுந்தருளியிருந்து நித்யமுக்தர்களுக்குக் காட்சி தந்தருளுமாபோலே எம்போல்வாரை வாழ்விக்க வேண்டிக் காளமேகத் திருவுருவத்தைக் காட்டுவாய்; இப்படியெல்லாம் உகரிந்தருளுமவனான நீ அபதார்த்தமாயிருந்தவென்னை ஒரு பதார்த்தாமக்கி இங்ஙனே வாசிகமான கைங்கரியத்தைப் பண்ண வல்லேனாம்படி அருள்புரிந்தாய்; திருநாட்டிலே நித்யமுக்தர்களுக்கு நித்யமுக்தர்களுக்கு நித்யமாக ஓலமுகங் கொடுத்துக்கொண்டிருக்கிற வண்ணமாக, வைதிகர்கள் நிறைந்த வானமாமலைப்பதியிலே நித்யஸந்நிதி பண்ணியிருக்கின்ற பிரானே! நீ இவ்வளவாக உபகரித்து நின்றவிதுக்கு என் தலையில் ஒரு கைம்முதல் இருந்ததாக அறிகின்றிலேன் என்றாராயிற்று.

English Translation

O Dark-hued Lord of Vaikunta with the discus and a Garuda-banner, you made a person of this insignificant self, and took me into your service. O Lord of Sivaramangala-nagar, where many learned Vedic seers live, you have graced me from there, I know not how to repay you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்