விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்*  ஆகிலும் இனி உன்னை விட்டு* 
    ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்*  அரவின் அணை அம்மானே* 
    சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்*  சிரீவரமங்கல நகர்* 
    வீற்றிருந்த எந்தாய்!*  உனக்கு மிகை அல்லேன் அங்கே*.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேறு - சேற்று நிலங்களிலே
செந்நெலூடு - செந்நெற்பயிர்களிடையே
தாமரை மலர் - தாமரைகள் மலரப்பெற்ற
சிரீவரமங்கலம் நகர் - கிரிவரமங்கையென்னும் வானமாமலைப்பதியிலே
வீற்றிருந்த எந்தாய் - இருந்தருளும் எம்பெருமானே!

விளக்க உரை

(நோற்ற நோன்பு) நோன்பு யன்று கர்மயோகத்தைச் சொல்லுகின்றது; தமக்குக் கர்மயோகமில்லையென்று சொல்லவேண்டில் ‘நோன்பிலேன்” என்றால் போதாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்னவேணுமோ? அதற்குக் கருத்து ஏன்? என்னில்; ஒருபடியாலும் நோன்பு இல்லை என்று சொல்லப்போகாது; யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆறுஷங்கிகம் என்றாப்போலே சில ஸுக்ருத விசேஷங்கள் இல்லையென்னப்போமோ? “என் கைப்பாடாகச் செய்ததொரு கருமமில்லை” என்று சொல்லுவதே யுந்தமாதலால் நோன்புக்கு ‘நோற்ற’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டது. நுண்ணறிலிவேன் = அறிவுக்கு நுண் என்று அடைமொழி கொடுத்ததன் கருத்து யாதெனில்; முந்நுற ஸ்வஸ்வரூபத்தையுணர்ந்து பிறகு பாஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பதாகிற நுட்பமான அறிவு இல்லாமையைச் சொன்னபடி. ஆகிலும் = என் கையிலே ஒரு நைம்முதலும் இல்லையாகிலும் என்றபடி, கர்மயோக ஜ்ஞானயோகங்களில்லாமை சொன்னது பக்தியோகமில்லாமை சொன்னபடிக்கும் உபலக்ஷணமாம். ** -தர்மநிஷ்டோஸ்மி க. சாத்மேவேதீ க பக்திமாந் த்வந் சரணாரலிந்தே” என்று ஆளவந்தாரருளிச் செய்த சந்தை இங்கு அநுஸந்தேயம்.

English Translation

O Lord who resides in fertile Sivaramangalanagar where red lotus and paddy abound, I have not done penances, I have no subtle intelligence, yet no more can I bear to be separated from you even for a moment. Am I one too many for you there?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்