விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்*  உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்* 
    உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்*  உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்* 
    உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்*  உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?* 
    உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?*  உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னுடைய பேதை - என்னுடைய சிறு பெண்பிள்ளை
எனக்கு உற்றார்கள் ஆரும் இல்லை என்னும் - எனக்கு உறவினர் ஒருவருமில்லையென்கிறாள்.
இங்கு எனக்கு உற்றார்கள் எல்லாரும் என்னும் - இவ்வுலகில் எனக்கு யாவரும் உறவினர் என்கிறாள்;
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் - (சிலரை) எனக்கு உற்றார்களாம்படி செய்வதும் நானே யென்கிறாள்.
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் - (அற்பபலன்களுக்காகக்) கிட்டுமவர்களை (அந்த அற்பபலன்களைக் கொடுத்து அகற்றுவதும் நானே யென்கிறாள்.

விளக்க உரை

(உற்றார்கள்.) உற்றார்களெனக்கில்லையாகும் = இதற்குப் பலபடியாகப் பொருள் கூறலாம்; ‘உற்றார்களெனக்கில்லை’ என்றது ‘பகைவர்களுமெனக்கில்லை’ என்றதற்கும் உபலக்ஷணமாகி, *** =ஸமோஹம் ஸர்வபூதேஷூக மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியாச்சு என்று கீதையிலருளிச் செய்தபடி ஸர்வஸாதாரணன் எம்பெருமான் என்றபடி. அன்றியே என்னோடுண்டான ஸம்பந்தமறிந்து என் பக்கல் நேசிப்பார் ஆருமில்லை என்றதாகவுமாம். பலரும் தேவதாந்தர பஜனம்பண்ணித் தொலைகின்றார்களேயல்லது என்னளவில் வருவார் ஆருமில்லையென்றபடி. உற்றார்கள் எனக்கு இங்கெல்லாரும் = கீழே உற்றார்களில்லை யென்றது ‘அவர்கள் கருத்தாலே; இது எம்பெருமான்றன் கருத்தாலே சொல்லுகிறது. ‘இராமட மூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்துநோக்கிக்கொண்டு போரும்” என்றும், “கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோன்றாதபடி நின்று ஸத்தையை நோக்கி உடன் கேடனாய்” என்றும் பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்தபடியே எம்பெருமான் எல்லாரையும் உற்றார்களாகவே நினைத்துக் காரியங் செய்கிறபடி அன்றியே எம் பெருமானைவிட்டுத் தேவதாந்தா பஜனம்பண்ணுமவர்களும் = யேப்பந்ய்தேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயாந்விதா: தேபி மாமேவ கௌந்தேய! யஜந்த்யவிதி பூர்வனம். * என்று கீதையருளிச்செய்தபடி எம்பெருமானையே யஜிந்தார்களாகத் தேறுகிறபடியால் அதுதன்னைக் சொல்லுகிறதாகவுமாம்

English Translation

The things my found daughter prates! "I have no friends", she says, then, "All here are my friends', and, "It is who make bonds, It is I who break bonds; even the bond between friends is me" Has the peerless lord possessed her? O Friendly people of the world, what can I say?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்