விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்*  திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்* 
    திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்*  திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*
    திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்*  திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?* 
    திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*  திறம்பாது என் திருமகள் எய்தினவே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐவரை - பஞ்ச பாண்டவர்களை
திறம் காட்டி காத்தேனே என்னும் - உபாயங்கள் காட்டி நானே ரக்ஷித்தேனென்கிறாள்;
திறம்பாமல் - அபயாமொன்று மின்றிக்கே
கடல் கடைந்தேனே என்னும் - நானே கடல் கடந்தேனெக்கிறாள்; (இப்படி இவள் வொல்வதானது)
திறம்பாத கடல் வண்ணன் எறகோலொ - அடியாரை நோக்குவதில் சலியாதவனும் கடல்கண்ணனுமான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?
திறம்பாத உவகத்தீர்க்கு - இச்செய்தியை அவசியம் அறிந்தேதீர வேணுமென்று ஸ்திரமாயிருக்கிற உலகத்தீர்களான உங்களுக்கு (இப்பெண் பிள்ளை)

விளக்க உரை

(திறம்பாமல்.) கெடுதலொன்றும் வாராதபடி நிலவுலகத்தைக் காப்பவன் எம்பெருமானே; இந்திரன் பண்டு பசிக்கோபத்தினால் ஏழுநாள் இடைவிடாது மழை பெய்வித்தபோது “கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுமழிந்தில வாடிற்றில், வடிவேலு திருவுகிர் நொந்துமில” என்னும்படியே அநாயாமையாகக் கோவர்த்தனமலையைக் கொற்றக்குடையாகத் தாங்கி நின்றவனும் எம்பெருமானே. தேவசுரயுத்தம் நடைபெறும்போதெல்லாம் அசுரர்களை மாய்ப்பவனும் எம்பெருமானே; **• = க்ருஷ்ணாச்ரயா: க்ருஷ்ணபவா: க்ருஷ்ணநாதாச் ச பாண்டவா:* என்னும்படி பஞ்சபாண்டவர்களை ரக்ஷித்தருளினவனும் எம்பெருமானே; *மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையானும் எம்பெருமானே; உண்மை இங்ஙனமிருக்க, அக்காரியங்களெல்லாம் நானே செய்தேனென்கிறாள் இப்பராங்குச நாயகி; இங்ஙனேசொல்லுவது கடல் வண்ணன் வந்து இவளிடத்து ஆவேசித்ததனாலே போலும். ‘கேட்டல்லது கால்வாங்கோம்’ என்றிருக்கிற உங்களுக்கு நான் எத்தைச் சொல்லுவது? “ஆழங்காலிலே யிழிந்தார்படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப்போமோ?” என்பது நம்பிள்ளையீடு.

English Translation

My daughter says, "Unfailingly I rule over the Earth! Then showing my might, unfailingly, I lifted the mountain, killed the Asuras, and protected the five! The ocean too was churned by me!". Has the ocean-hued Lord taken her? O Severe people of the world, what can I say.?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்