விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறிவு அரிய பிரானை*  ஆழியங்கையனையே அலற்றி* 
    நறிய நன் மலர் நாடி*  நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
    குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருக்குறுங்குடி அதன்மேல்* 
    அறியக் கற்று வல்லார் வைட்டவர்*  ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறிவு துரிய பிரானை - ஒருவர்க்குமறிய வொண்ணாக ஸ்வாமியாயும்
ஆழி அம் கை யணையே - திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனாயுமிருக்கிற எம்பெருமானையே
அலற்றி - வாய்வெருவி
ஈறிய - பரிமளம் மிக்க
நல் மலர் நாடி - நல்ல பூக்களை நாடுபவரான

விளக்க உரை

(அறியவரிய பிரானை) கையுந் திருவாழியுமாயிருக்கிற தன்னுடைய அழகு ஒருவர்க்குமறியவொண்ணாதபடியிருக்கிற எம்பெருமானையே அலற்றித் திருக்குறுங்கடி நம்பி விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த இத்திருவாய்மொழியை அறியக் கற்றுவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவ ஸார்பௌமர்களாய் வீறு பெறுவார்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. நிற நன்மலர்நாடி = ஆசார்யஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் *** மலர்நாடி ஆட்செய்ய உய்யக்கொண்டு ஆரைக் கொண்டு வாளம் வில்லுங் கொண்டென்கிற இழவுகள் தீரப்பெற்றது” என்கிற சூர்ணிகையின் வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள், “* நறிய நன்மலர் நாடி என்கிறபடியே சேஷத்வபரிமளயுக்தமாய் ச்லாக்க்யமான ஆத்மபுஷ்பங்களைத்தேடி” என்று பொருளருளிச்செய்தலும், “ஸர்வவ்யாக்யானங்களிலும் ‘பரிமளத்தையுடைத்தாய் ச்லாக்யமான புஷ்பங்கள்போலே ஆராய்ந்து சொன்னவாயிரம்’ என்று ப்ரபந்த விசேஷமானச் சொல்லியிருக்கையில், இவர்க்கு நினைவு ஆத்மபுஷ்பங்களைத் தேடி யென்கிறவிது என்றுகொள்ளவேணும்” என்றருளிச்செய்ததும் இங்கு அறியத்தக்கன. நாடி என்பதை வினையெச்சமாகவும் கொள்ளலாம்; இ விருதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம். குறிகொள் என்கிற அடைமொழி ஆயிரத்திற்குமாகலாம், இப்பத்துக்குமாகலாம்.

English Translation

This decad of the thousand well-known songs, by fair kurugur's satakopan on the Lord of Tirukkurungudi, the incompre hensible discus bearer, is sung with flowers. Those who sing it with understanding will unite with Vishnu while on Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்