விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
    குழுமித் தேவர் குழாங்கள்*  கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே* 
    எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்*  ஆர்க்கும் அறிவு அரிதே*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவர் குழாங்கள் - நித்ய ஸூரிகளின் திரள்கள்
குழுவி - நெருங்கி
கை தொழ - ஸேவிக்கும்படி
சோதிவெள்ளத்தின் உள்ளே - தேஜஸ்ஸமுஹத்தினிடையிலே
எழுவது - எழுகின்ற

விளக்க உரை

(கழியமிக்கதோர்.) லோகத்தில் அமேத விஷயங்களைப் பிரிந்தால் நாட்செல்ல நாட்செல்ல ஸ்நேஹம் குறைந்து வருவதைக் காணாகின்றோம்; அப்படியிருக்கவும் இப்பெண்பிள்ளை தான் கலந்து பிரிந்த விஷயத்தில் மேன்மேலும் காதல்மையல் ஏறுகின்றாள். ஆதனால் இனி இவள் ஒருகாலும் திருக்குறுங்குடி அம்பியை ஸேவிக்கவொண்ணாமே செய்துவிடவேணும்’ என்று அன்னை சொல்லிக்கொண்டிருக்க அது கேட்ட தலைவி கூறுகின்றாள். உலகத்தாருடைய காதலின் நியாயமோ எவ்விடத்தும் பார்ப்பது? லெளகிகர் ஈடுபடும் விஷயத்திலோ நான் ஈடுபட்டது; குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நமபி பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது. நித்யஸூரிகளினுடைய திரளானவை பெரு வெள்ளத்திலிழிவாரைப் போலே கை கோத்தக்கொண்டு இழியவேண்டும்படி தேஜோ ராசிமயமானதோர் திருவுருவம் என்னெஞ்சினுள்ளே திகழா நின்றது; *** = நித்யமிந்த்ரியபதாதிகம் மஹோ யோகிநாமபி ஸுதுரகம் திய: அப்யநுச்ரவ சிரஸ்ஸு துர்க்கரஹம் * என்னுமாபோலே அதுதான் யார்க்கும் நிலமல்லாதது; அன்னதோருரு என்னெஞ்சினுள்ளே எழாநிற்க, தாய்மார் காணக்கொடுத்தாலென்ன? காணக்கொடாவிடிலென்ன? என்றாளாயிற்று.

English Translation

My mother let no one see me, saying, "She is growing amorous day by day". After seeing the Lord of abiding fame in Tirukkurungudi, a radiant form of flooding effulgence, appears in my heart worshipped by hordes of celestials, hard for anyone's understanding.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்