விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
    செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்*  சிற்றிடையும் வடிவும்* 
    மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்*  பாவியேன் முன் நிற்குமே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் முகம் கையுள் வைக்கும் என்று - (இப்பெண் பிள்ளையானவள்) அழகிய முகத்தைக் கையிலே இட்டு வைக்கின்றாள்’ என்றும்
நையும் என்று - நைகின்றாள் என்றும் சொல்லி.
அல்குலும் - கடிப்ரதேசமும்
சிறு இடையும் - சிறுசிறு இடையும்
வடிவும் - திருமேனியும்

விளக்க உரை

(கையுள் கண் முகம்.) உலகத்தில் துக்கம் விஞ்சினால் முகத்தைக் கைத்தலத்திலே வைத்துக்கொண்டு சிந்தை கலங்கிக் கிடப்பதென்று ஒன்றுண்டு; அந்த நிலைமை பாராங்குசநாயகிக்கு முண்டாயிற்று; அங்ஙனே முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்தாள்; அதுகண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ?’ என்று முனிய, அதற்குத் தலைவி கூறுகின்றாள்; திருக்குறுங்குடி நம்பியின் செந்தாமரைக் கண்ணும், அந்நோச்ருக்குத் தோற்றவர்கள் இளைப்பாறுமல்குலும் கீழையும் மேலையுங்கொண்டு அநுமித்து அறியவேண்டும்படியான இடையும், இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும், களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று* என்கிறபடியே திருதுழல்கள் அலைய நின்ற திருத்தோள்களும் என்முன்னே தோன்றா நின்றனவே! அவை அணைக்குமாறு கைக்கு எட்டாமையினாலே கையுள் முகம் வைத்து நையவேண்டியதாயிற்று, என் செய்வேனென்றோளாயிற்று. மைகொள் மாடம் = உள்ளுள்ள எம்பெருமானுடைய நிழலீட்டாளே கருமைபூண்ட மாடங்களையுடையது திருக்குறுங்குடி.

English Translation

Ladies, you blame me saying, "She buries her face in her hands, she swoons". Ever since I saw the Lord in Tirukkurungudi surrounded by fall houses, his red lotus eyes, hips, slender waist, face long dark tresses, and broad shoulders appear before my sinful self.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்