விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த*  நீண்ட பொன் மேனியொடும்* 
    நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்*  நேமி அங்கை உளதே*.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிறைந்த - பரிபூர்ணமான
சோதி வெள்ளம் சூழ்ந்த - தேஜஸ்ஸமூஹத்தாலே சூழப்பட்டு
நீண்ட - உத்துங்கமான
பொன்மேனியோடும் - திருமேணியோடுகூட
என் உள்ளே - எனது நெஞ்சுக்குள்ளே

விளக்க உரை

(நிறைந்த வன்பழி.) கீழ்ப்பாட்டிற்கே ‘நம் குடிக்கு இவள் வன்பழி” என்று சொல்லித் தாய்மார் முனிந்தமை சொல்லிற்கு. “மனங்குற்றமாந்தர் பழிக்கில் புகழ்” என்கிறபடியே பழியையே பரமபோக்யமாகக் கொள்ளுனானாகையாலே, தாய்மார் பழிக்கப் பழிக்க, தலைமகளினுடைய அதிப்ரவ்ருத்தி அதிகரிக்கத் தொடங்கிற்று; அதனால் “நிறைந்த வன்பழி நங்குடிக்கு இவன் என்று பின்னையும் கைநடுக்கி வையத் தொடங்கினால் தாய்; அது கண்டு தலைவி சொல்லுகிறாள்; “ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து ஈர நெல்வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள் யோவர் காதல் கடல் யுரைய விளைவித்த காதமர்மேனி” என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறபடி பழியே விளைநீராகத தன்னிடத்துக் காதலை வளரச் செய்யுமிதுதானே தனக்குச் சிறந்த கீர்த்தியாகப்பெற்ற திருக்குறுங்குடி நம்பியை நான் காண்பதற்கு முன்பே இவர்கள் இங்ஙனே முனிந்தாலும் பயனுள்ளதாம்; காணப்பெற்றபின்பு இவர்களின் முனிவு என் செய்ய? நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த விலக்ஷணமான திருமேனியழகும், அல்லாத அழகிற்காட்டில் கையும் திருவாழியுமான அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென்? பாவமென்றாலென்? நானோ சிளைப்பது என்கிறாள்.

English Translation

After I saw the Lord of great fame in Tirukkurungudi, his beautiful golden form of exceeding radiance has filled my heart. He appears everywhere wielding a discus in the beautiful hand. My mother says, "She is a great scourge on our fair house-hold".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்