விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
    தொக்க சோதித் தொண்டை வாயும்*  நீண்ட புருவங்களும்* 
    தக்க தாமரைக் கண்ணும்*  பாவியேன் ஆவியின் மேலனவே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பக்கம் நோக்கி நிற்கும் என்ற - ‘(இவள்) அவன் எந்த பக்கமாக வருகின்றானென்று எதிர்பார்த்திருக்கிறானென்றும்,
நையும் என்று - (வாக்காணாமையாலே) நைகின்றான் என்றும் சொல்லி
அன்னையரும் - தாய்மாரான நீங்களும்
நீண்ட புருவங்களும் - நீண்டிருக்கின்ற புருவங்களும்
தக்க - தகுதியான

விளக்க உரை

- (பக்கம் நோக்கி நிற்கும்) எம்பெருமான் எழுந்தருளுவதற்கு ஸம்பாவனாயுள்ள பக்கங்களிலேயே பாராங்குச நாயகியின் கண்ணோக்கம் செல்லுகின்றபடியால் அதைக் கண்டு தாய்மார்கள் முனிகின்றார்கள். அந்தோ! இப்படியும் முனியலாமோவென்கிறாள் தலைவி. சொன்ன சொன்னபடியெல்லாம் தரும்படியிருக்கிற கீர்த்திவாய்ந்த திருக்குறுங்குடி நம்பியை, அர்த்தக் கீர்த்திகளைப் பேசிக்களித்தே போது போக்கும் நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு, என்னை இவர்கள் முனிவதற்கு என்ன ப்ரஸக்தியுண்டு? மற்றபேர்கள் ஸேவிக்குமாபோலேயோ நான் ஸேவித்தது? அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவுகொண்டாற்போன்றதான திருவதரமும், *தன்கைச் சார்ங்களதுவேபோல் அழகியவாம் நீண்டு விளங்குகின்ற தீருப்புறாவங்களும், அப்பருவங்களுக்குத் தகதியாய் திகழ்கின்ற திருக்கண்களும் தோற்புரையே போதையன்றிக்கே உயிர் நிலையிலே நின்று நஸியா நின்றனவே; இப்படிப்பட்ட நான் பக்கம் நோக்கி நில்லாதே வேறு என் செய்யவல்லேன்? அவன் வரக் காணாமையாலே நைவதும் செய்கின்றேன்; இதற்காகத் தாய்மார்கள் நம் க்ருஷியலித்ததேயென்று உகக்கவேண்டியிருக்க, வெறுப்பது வழக்கோனென்றாயிற்று.

English Translation

Mother, you blame me saying, "She stands and stares, she swoons". After I saw the Lord of great fame in Tirukkurungudi, his glowing coral lips, his long eyebrows, and his perfect lotus eyes have possessed my wretched soul!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்