விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    பூந்தண் மாலைத் தண் துழாயும்*  பொன் முடியும் வடிவும்* 
    பாங்கு தோன்றும் பட்டும் நாணும்*  பாவியேன் பக்கத்தவே*.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ண நீர்சன் - (இவனது) கண்ணீர்த் துளிகளானவை
நீங்க இல்லா என்று - துடைத்தாலும் நிற்கின்றனவில்லை என்று சொல்லி
தண் - குளிர்ந்த
மாலை - மாலைவடிவமான
தண் துழாயும் - திருத்துழாயும்

விளக்க உரை

(நீங்க நில்லா.) = ஆஹ்லாதசீத நேத்ராமபு: புகீக்ருசகாத்ரவார், ஸதா வர சணாவிஷ்டர் த்ரஷ்டவ்யஸ் ஸர்வதே ராமபுரி புலகீக்ருசகாத்ரவார், ஸதா வரதணாவிஷ்டர் த்ரஷ்டவாஸ் ஸர்வதேஹிபீ: என்று பகவத் குணங்களிலே யீடுபட்டுக் கண்ணும் காணீருமாயிருக்கிற நிலைமையைக் காண்கைக்கு ஆசைப்பட வேணுமென்று சொல்லியிருக்க, அன்னையீர்! அந்த நிலைமையைக் கண்டு அந்தோ! நீங்கள் பெறு* * என்ன நீதி!; திருக்குறுங்குடியிலுள்ள சோலைகளில் தேன் வெள்ளம் மாறினாலும் மாறும், என் கண்களில் கண்ணீர் மாறாதுதான். ஏனென்றில்; (பூந்தண்மாலை யித்யாதி) உபாஸ்பூதிக்கும் தானே கடவனென்பது தோன்ற அணிந்த செவ்வித் திருத்துழாய் தணி மாலையும், உபயவிபூதியும் தன் முடியிலே செல்லுங்படி நவித்த திருவபிஷேகமும், அந்த மாலைக்கும் முடிக்கும் ஏற்றிருக்கும்படியான திவ்யமங்கள விக்ரஹமும், திருவரை பூந்தாற்போலே அங்குத்சைக்குப் பாங்காய் தோற்றுகிற திருப்பீதாம்பரமும் அதன் மேலாபரணமான வீடு காணும் இடைவிடாது என்னருகே நின்று பிரகாசியா நின்றனவே! இப்படியான பின்பு என் கண்ணீரால் மாற வழி ஏது? என்கிறாள். இந்தக் கண்ணீர் ஆனந்தத்தாலுமாகாலும், சோகத்தாலுமாகலாம்; உருவெளிப்பாடாய்த் தோற்றுமையாலே ஆனந்தமுள்ளது; அநுபவிக்கக்கிடையாமையாலே சோகமுள்ளது. அது தோன்றலே ‘பாலியேன்’ என்றது

English Translation

Mother, you blame me for the tears that swell in my eyes endlessly. After I saw the Lord of nectar-groved Tirukkurungudi, his beautiful garland of Tulasi flowers, his golden crown, his face, his silken threads and belt haunt my wretched self.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்