விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்றிடும் திசைக்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    வென்றி வில்லும் தண்டும் வாளும்*  சக்கரமும் சங்கமும்* 
    நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா*  நெஞ்சுள்ளும் நீங்காவே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னையரும் - தாய்மாரான நீங்களும் (என்னைப்பற்றி)
நின்றிடும் என்று - இப்பெண் ஸ்தப்தையாய் நிற்கின்றாளென்று சொல்லியும்
திசைக்கும் என்று - இப்பெண் அறிவழிந்து கிடக்கிறாளென்று சொல்லியும்
நையும் என்று - இப்பெண் நைநின்றாளென்று சொல்லியும்
முனிதிர் - வெறுத்துரைக்கின்றீர்கள்;

விளக்க உரை

(நின்றிடுந் திசைக்கும்.) நம்பியழகை நினைத்துச் சற்றுப்போது ஸ்தம்பித்து நிற்பது, பின்னை அறிவுகெட்டு அசேதநவஸ்துபோலே நிற்பது, உருகி நிற்பது இப்படியான நிலைமைகளைத் தலைமகள் அடைந்துவாரா நிற்க. தாய்மார் இதைச் சொல்லிச் சொல்லிப் பழிதூற்றத் தொடங்கினார்கள்; அதற்குத் தலைமகளுரைக்கின்றாள்; நான் ஒரு ஸ்யாபாராக்ஷமையன்றியே ஸ்தப்தையாய் நிற்பது வாஸ்தவம்; அறிவழிந்து நிற்பதும் வாஸ்தவம்; நைந்து கிடப்பதும் வாஸ்தவம்; இதற்காக நீங்கள் சீறுகைக்கு என்ன ப்ரஸக்தியுண்டு? குன்றம்போல் மணிமாடநீடு திருக்குறுங்குடி நம்பியை நான் ஸேவித்தது போல நீங்களும் ஸேவிக்கப்பெற்றாலன்றோ தெரியும். -***-வ்ருக்ஷே வ்ருக்ஷேச பச்யாமி சீரக்ருஷ்ணாஜிநாம்பரம் என்ற மாரிசனுடைய நிலைமையன்றோ எனக்குமாயிற்று. எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களேயன்றோ என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன. இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், ஸாவீர்; வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்? என்றாளாயிற்று.

English Translation

Mother, you blame me saying, "She stands, she falters, she swoons", Ever since I saw the Lord in fall-mansioned Tirukkurungudi, his victorious bow, mace, dagger, discus and conch appear before me everywhere, never leaving my eyes and heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்