விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறங்குவான் போல்*  யோகுசெய்த பெருமானை* 
    சிறந்த பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொல்*
    நிறம் கிளர்ந்த அந்தாதி*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    இறந்து போய் வைகுந்தம்*  சேராவாறு எங்ஙனேயோ?*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உறங்குபவன்போல் - நித்திரை செய்பவன்போல்
யோகு செய்து - ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற
பெருமானை - எம்பெருமான் விஷயமாக
சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன் - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார்
சொல் - அருளிச் செய்த

விளக்க உரை

(உறங்குவான் போல்.) கீழ்ப்பாட்டில் “உலகோவுறங்குமே” என்று சொன்னதில் ‘எம்பெருமானும் உறங்குகின்றானே’ என்ற பொருளும் தோற்றியிருக்கையாலே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! நான் உறங்குகிறேனல்லேன்; உமக்கு எந்த விதமாகக் காட்சிதரலாமென்று ஆலோசித்துக் கொண்டிரா நின்றேனத்தனை காணும்” என்றருளிச்செய்தான் போலும்; அது கேட்டு “உறங்குவான் போல் யோரு செய்த பெருமானை” என்கிறார். யோரு செய்கையாவது உபாய சிந்தை பண்ணுகை. இங்ஙனே அறியப் பெறுகையாலே ஆழ்வார் தாமும் தரித்து வரும் தரித்தபடியைச் “சிறந்த பொழிக்கும் குருகூர்” என்றதனால் தெரிவித்தபடி. “இப்பத்தால் இறந்துபோய்” என்று இதிலே சேர்த்து அந்வயித்து, இப்பத்தைச் சொல்லுவதற்கு இறந்துபோவது பலன் என்று பொருள் கொள்ளலாகாது; “இப்பத்தால் வைகுந்தம் சேராவாறு’ என்று அந்வயித்துக் கொள்ள வேணும். அவரவர்கள் ப்ராப்த காலத்தில் இறந்துபோவது எப்படியுமுள்ளது; அப்படி இறக்க நேருங்காலத்தில் இப்பதிகத்தின் பயனாகப் பரமபத ப்ராப்தி தவிராதென்றவாறு.

English Translation

This decad of the colourful radiant Anadodi of thousand songs by satakopan of kurugur surrounded by excellent groves, is addressed to the Lord who did yoga like one sleeping, singing this will secure Heaven after death.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்