விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெம் சுடரில் தான் அடுமால்*  வீங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    அம் சுடர வெய்யோன்*  அணி நெடும் தேர் தோன்றாதால்* 
    செஞ் சுடர்த் தாமரைக்கண்*  செல்வனும் வாரானால்* 
    நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?*  நின்று உருகுகின்றேனே!*            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வீங்கி இருளின் - மிகச் செறிந்த இருளையுடைத்தாய்
நுண் துளி அய் - நுண்ணிய பனித்துளியை யுடையதாய்க் கொண்டு
தான் - இராப்பொழுதானது
வெம் சுடரில் - வெவ்விய நெருப்பிற் காட்டில்
சுடும் - சுடர்கின்றது

விளக்க உரை

(வெஞ்சுடரில்.) இரவோ மிகவும் நலியா நின்றது; ஆதித்தியனும் ஆவிர்ப்பளிக்கின்றிலன்; எம்பெருமானும் வந்து தோன்றுகின்றிலன்; நான் நின்று நோவுபடுமித்தனை போக்கி என் பாதையைப் போக்குவார் ஆருமில்லையே யென்கிறாள். இராவணன் மாரீசனைத் துணைகொண்டு வந்து நலிந்தாப்போலே இராப் பொழுதாவது நுண்ணிய பனித்துளியைத் துணைகொண்டு வந்து வெவ்விய நெருப்பிற்காட்டிலும் அதிகமாகவே கலியா நின்றது; எப்படிப்பட்ட துக்கமும் இரவி தோன்றினவாறே சிறிது மறைந்தொழியுமே; இந்த இவரின் தேர்தானும் வந்து தோன்றக்காணோமே! ஆர்த்திமிக்கால் செந்தாமரைக் கண்ணனான எம்பெருமாள் வந்து தோன்றுவதென்று ஒரு முறைமையுண்டு; அப்படி அவனும் வந்து தோன்றிற்றிலன்; இனி எனது மனத்துயரை மாய்ப்பாரார்? நானோ நீர்ப்பண்டமாயுருகி பொழியா நின்றேன் என்கிறார்.

English Translation

Darkness packed with fine pitch scorches like fire. The beautiful tall chariot of the Sun does not appear, alas. The wealthy Lord of lotus eyes too does not come, alas. who can cure my heart's malady? Alas, I stand and melt.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்