விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பின்நின்று காதல் நோய்*  நெஞ்சம் பெரிது அடுமால்* 
    முன்நின்று இரா ஊழி*  கண் புதைய மூடிற்றால்* 
    மன் நின்ற சக்கரத்து*  எம் மாயவனும் வாரானால்* 
    இந் நின்ற நீள் ஆவி*  காப்பார் ஆர் இவ் இடத்தே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பின் நின்ற - பிடரிபீடித்துள்ளுவதற்காகப் பின் தொடர்ந்து நின்ற
காதல் நோய் - ப்ரேம விரோதியானது
நெஞ்சம் - (தன்குப்பிறப்பிடமான நெஞ்சை)
பெரிது - மிகவும்
அடும் - அழிக்கின்றது

விளக்க உரை

(பின்னின்ற காதல்) முதலடிக்குப் பொருளருளிச் செய்யாநின்ற திருக்குருகைப்பிரான்பிள்ளான் ஆறாயிரப்படியில்- “முடிந்தபின்பும் செல்லுகின் விச்லேஷவ்யஸகம் ஒன்றும் பொறுக்கலராயிருக்கிறதில்லை” என்றருளிச் செய்திருக்கயாலே, பின்னின்ற என்பதற்கு, பின்னேயும் நிற்கின்ற (அதாவது) நான் மரணமடைந்த பின்னையும் நலிவதாக நிற்கின்ற என்று பொருள். திருவுள்ளம் பற்றியதாக விளங்குகின்றது. பிடரி பிடித்துத் தள்ளுவாரைப்போலே பின்னே நின்று குமுக்குகின்ற காதல் நோய் என்பது நம்பிள்ளையருளிச்செய்த பொருள். ‘மரணமடைந்த பின்னையும் நிற்கின்ற காதல்நோய்” என்றால் இது எங்ஙனே பொருந்துமென்று சிலர் சங்கிக்கக்கூடும்; “நான் முடிந்தாலும் என் காதல் முடியாது போலிருக்கிறது’ என்று சொல்வது உலகத்திலுமுண்டே; அதுவாயிற்று இங்கு விவக்ஷிதம். ஆழ்வார் தம்முடைய காதலைப்பற்றிப் பலவிடங்களில் பல வகையாகச் சொல்லுவார்; “ என் காதலுரைக்கில் தோழீ! மண்டிணி ஞாலமும், ஏழ்கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்” என்பர் ஓரிடத்தில்; “அதனில் பெரிய என்னவா” என்பர் மற்றோரிடத்தில். “பின்னின்ற காதல்” என்கிறார் இங்கு. இந்தக் காதலுக்கு இடம் கொடுக்கலாகாதென்று நான் என்குப் போனாலும் புக்கலிடம் புக்குப் பின்னே திரிந்து கலிகின்றது ப்ரேம வியாதி என்கிறார். நெஞ்சம் பெரிது அடும் = நெஞ்சை மிகவும் நோவுபடுத்துகின்றது. ‘கட்டமே காதலென்று மூர்ச்சிக்கும்” என்றதும் காண்க

English Translation

An incurable love-sickness torments my soul. An aeon of darkness hangs over my sunken eyes. My discus-Lord-eternal too does not come. Who on Earth can save this soul?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்