விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரைக்கும் கருங் கடல் வண்ணன்*  கண்ண பிரான் தன்னை* 
    விரைக் கொள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
    நிரைக் கொள் அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரைக்க வல்லார்க்கு*  வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்*  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரைக்கும் கோக்ஷிக்கின்ற
ஈறா கடல் கண்ணன் -கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன்
கண்ணபிரான் தன்னை கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து
விரை கொள்பொழில் பரிமனம்மிக்க சோலைகளையுடைய
குருகூர் திருநகரியில் அவதரித்த

விளக்க உரை

(இரைக்கும்.) இத்திருவாய்மொழி சொல்லவல்லார் என்னைப்போலே மடலூர்வேனென்ன வேண்டாதே. தாங்களிருக்குமிடத்தே எம்பெருமான், தானே வந்து நித்யாம்ச்லேஷம் பண்ப்பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். “இரைக்குங் கருங்கடல் வண்ணன்” என்றதற்கு இரண்டுபடியாக அருவிச்செய்வார்கள். வண்ணமென்று நிறத்துக்கும் தன்மைக்கும் பெயர்; நிறத்தைச் சொல்லும்போது மட அலர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவழகு சொல்லிற்றாகிறது. தன்மையைச்சொல்லும்போது, ப்ரக்ருதத்தில் கடலுக்கும் எம்பெருமானுக்கும் துன்பமாகச் சொல்லக்கூடிய தன்னை யாதெனில்; இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “(இரைக்கும் கருங்கடல் வண்ணன்) அனந்தாழ்வான் பணித்தானாக நஞ்சீயர் வந்து பட்டருக்கு *** என்றபோது கடல் கீழ் மண்கொண்டு மேல் மண் எறிந்தாற்போலேயாயிற்று. இவள் மடலூர்வன் என்ற துணிவைக்கேட்டு அவன் தன் ஸர்வாதிகர்வம் கலங்கினபடி என்றருளிச்செய்தார்” என்று ஸமுத்ரராஜனை நோக்கிப் பெருமாள் சரணாகதி பண்ணச் செய்தேயும் அதன் முகங்காட்டாவிட்டவாறே இளையபெருமானை நோக்கி *** - சாபமாநய ஸௌமித்ரே!” (லக்ஷ்மணா! வில்லைக் கொண்டுவா) என்று நியமித்தருளினவுடனே கடல் கலங்கினது ஸ்ரீராமாயணப்ரஸித்தம். ஸ்ரீராமன் அம்புதொடுக்க நினைத்ததும் ஆழ்வார் மடலூர்வேளென்றதும் தூஸ்யமாகையாலே (இப்போது ஸமுத்ரஸ்தாகியனான எம்பெருமான்) மடலூர்வேனெற்ற சொல்லைக்கேட்டவாறே கலங்கினானாயிற்று. ஆக இத்தன்மையிலே ஸரம்யம் என்று அனந்தாழ்வாள் திருவுள்ளம்பற்றினபடி.

English Translation

This decad of the replete Andadi of thousand songs, by Satakopan of fragrant bowered kurugur, is addressed to Krishna, dark as the roaring seas. Those who sing it will find Vaikunta wherever they live.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்