விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    யாம் மடல் ஊர்ந்தும்*  எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
    தூ மடல் தண் அம் துழாய்*  மலர் கொண்டு சூடுவோம்*
    ஆம் மடம் இன்றி*  தெருவுதோறு அயல் தையலார்*
    நா மடங்காப் பழி தூற்றி*  நாடும் இரைக்கவே*.            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யா மடம் இன்றி - ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல்
தெருவு தோறு - வீதிகள் தோறும் புகுந்து
அயல் தைய லார் - அயல் பெண்களும்
நாடும் - ஸகல லோகமும்
நா மடங்கா பழி தூற்றி - நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி

விளக்க உரை

(யாமலூர்ந்தும்.) மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வஸ்வரூபத்தை உறுத்திக்காட்டுகிறபடி. திருவடி அசோகவனத்தில் பிராட்டியை நோக்கி ‘தேவரீர் இவ்வளவு அல்லல்படுவானேன்? ஒருநொடிப்பொழுதில் அடியேன் தேவரீரைப் பெருமாள் திருவடிவாரத்திலே கொண்டு சேர்க்குமாறு இசைந்தருளலாகாதோ?’ என்று சொல்ல, அதுகேட்ட பிராட்டி *••••••••••••••••••••• ** = சரைஸ் து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தாக:, மாம் நமேயத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய ஸத்ருசம்பவேத் என்றாள். எம்பெருமானுடைய திருவுள்ளப்படியே என்ன ஆகிறதோ அதைப்பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு ஸ்வரூபமேயன்றி நாமாக ஒரு அதிப்ரவ்ருத்தி செய்யத்தகாது என்பது இப்பிராட்டிவசனத்தினால் சிக்ஷிக்கப்பட்டதாகிறது. இப்படி யிருக்க வேண்டிய ஸ்வரூபத்தையுடையேவ்யான் என்று காட்டுகிறபடி. ஆனாலும் பதறாதிருக்க முடியவில்லை யென்கிறாள் மடலூர்ந்தும் என்பதனால். மடலூர்தல் என்பதற்குத் தமிழர்கள் சொல்லுகிறபடி பனை மட்டையைக் கையிலே கொள்ளுதல் முதலான காரியங்கள் இங்கு விவக்ஷிதமல்ல; ஸாஹஸமாக அதிப்ரவ்ருத்திகளைச் செய்தாகிலும் என்றபடி. அதாவது தன்னுடைய பதற்றத்தைக் காட்டுதல். எம்மொழியங்கைப் பிரானுடைய என்ற விடத்திலே நம்பிள்ளை யீடுகாண்பீன்; “அவன் கையுந்திருவாழியும் போலேயன்றோ நாள் கையும் மடலுமாய்ப் புறப்பட்டாயிருப்பது. நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால் அஞ்சி எதிரே வந்து தன் கையில் ஆபரணத்தை வாங்கி என்கையிலேயிட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே விட்டானாகில் குடியிருக்கிறான்; இல்லையாகில் எல்லாம் இல்லையாகிறது.”

English Translation

After we have ridden the Palymyra stalk through every street, -without feminine grace, making women speak unspeakable slander, while the world raves, -we shall wear the Tulasi flowers from the discus Lord to soothe us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்