விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து*  மருது இடை- 
    போய் முதல் சாய்த்து*  புள் வாய் பிளந்து களிறு அட்ட*
    தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை*  எந் நாள்கொலோ* 
    யாம் உறுகின்றது தோழீ!*  அன்னையர் நாணவே?*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோழீ - தோழியே!
பேண் முலை உண்டு - பூதனையின் முலையைப் புசித்து
சாடல் பாய்ந்து - சகடத்தை முறித்துத் தள்ளி
மருது இடைபோய்- இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று
முதல் சாய்த்து - (அற்றை) வேரோடே தள்ளி

விளக்க உரை

(பேய் முலையுண்டு.) மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார் ‘அந்தோ! இப்பெருமாளையோ நாம் குணஹீகனென்று குறைகூறின தாய்மார் “அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக் களிழ்தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள். எம்பெருமானுக்குப் பரோபகார சீலத்வம் நேற்று இன்றைக்கு வந்ததன்றே, ஜன்மஸித்தமாயிற்றேயென்று நிரூபிக்கிறான் பேய்முலையுண்டு இத்யாதியால். பூதனையால் வந்த ஆபத்தைப்போக்கி, சகடத்தினால் வந்த அனர்த்தத்தைத் தவிர்த்து, இரண்டை மருதமரங்களால் வந்த தீமையைத் தொலைத்து, பகாஸுரனால் வந்த வாதையை நீக்கி, குவலயாபீட யானையினால் நேர்ந்த விபத்தையும் தெலைந்து இப்படி ஆச்ரித விரோதி நிரஸாம் பண்ணி உபகரிக்கப் பெற்றோமே! என்று தூமுறுவல் செய்துநிற்கும் பெருமானை நம் தாய்மார் கண்டால் ‘இவனிடத்திலோ நாம் குணஹாநி சொன்னது’ என்று நாணிக்கவிழ்ந்திருப்பார்களே; அன்னவனை நாம்கிட்டுவது எந்நாள்கொலோ! என்றாளாயிற்று.

English Translation

The Lord drank the ogress' breasts, smote the cart, went between the Marudu trees, ripped the bird's beak, and killed the rutted elephant. He has a pearly smile and coral lips. O, when will we reach him and put these ladies to shame?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்