விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னை என் செய்யில் என்?*  ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்* 
    என்னை இனி உமக்கு ஆசை இல்லை*  அகப்பட்டேன்*
    முன்னை அமரர் முதல்வன்*  வண் துவராபதி- 
    மன்னன்*  மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோழிமீர் - தோழிமார்களே!
முன்னை அமரர் முதல்வர் - நித்ய ஸூரிநாதனும்
வண் துவராபதி மன்னன் - அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்
மணிவண்ணன் - நீலமணிவண்ணனுமான
வாசுதேவன் - கண்ணபிரானாகிற

விளக்க உரை

(அன்னை யென்செய்யிலேன்?) நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குணசேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள். அன்னை என்செய்யில் ஏன்? = “தாயார் பொருள், தாயார் பொறாள்’ என்று தோழி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்; தலைவி அவளை நோக்கி ‘தாயார் பொறாமல் என்ன செய்துவிடுவள்’ என்று கேட்டாள்; ‘உயிர் மாய்ந்து போவள்’ என்று தோழி விடை கூறினாள். அதற்குத் தலைவி சொல்லும் விடை இது, ‘தாயார் ஜீவித்தாலென்ன? முடிந்தாலென்ன?’ என்றவாறு. ‘தாயார் முடிவதையும் கணிசியாமல் இவள் நாயகனுடைய வடிவழகிலேயீடுபட்டாள்’ என்று ஊரார் பழி சொல்லுவர்களே! என்ன; ஊரென் சொல்லேன்? என்கிறாள். இப்படி உதறிச் சொல்லுகைக்குக் காரணம் என்ன? என்றுகேட்க; முள்ளையமார் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், (ஆகையாலே) என்னை (ப் பற்றி) இனி உமக்கு ஆசையில்லையென்கிறாள்.

English Translation

Sister! Whatever Mother may do, whatever the world may say, henceforth expect no love from me. For, I am caught in the drag-net of my gem-hued Lord Vasudeva. King of Dvaraka, the ancient Lord of celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்