விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் செய்யும் ஊரவர் கவ்வை*  தோழீ இனி நம்மை* 
    என் செய்ய தாமரைக் கண்ணன்*  என்னை நிறை கொண்டான்*
    முன் செய்ய மாமை இழந்து*  மேனி மெலிவு எய்தி* 
    என் செய்ய வாயும் கருங்கண்ணும்*  பயப்பு ஊர்ந்தவே*.           

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் செய்ய தாமரை கண்ணன் - சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்
என்னை - என்னுடைய
நிறை- அடக்கத்தை
கொண்டான் -கொள்ளை கொண்டான்; (அதனாலே)
முன் - முதன் முதலாக

விளக்க உரை

(என்செய்யும்.) கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில். என்செய்யுமூரவர்கவ்வை தோழி! இனிநம்மை என்று தன் வடிவைக் காட்டுகிறாள்போலும். இனி என்கிறாயே, இதற்கு என்ன அர்த்தம்? என்ற கேட்க, மேல்மூன்றடிகளும் அவ்வர்த்தம் கூறுவன. தோழீ! நான் இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே என்னை நீ இதில் நின்றும் மீட்டிருக்கலாமாயிற்று; எல்லை நடந்து விட்டதே யென்கிறாள். “இனி என்னை” என்னாதே “இனி நம்மை” என்கிறது தோழியையும் தன்னோடு கூட்டிக்கொண்டு. நிறவேறுபாடு தனக்குப்போலவே அவளுக்குமுள்ளதென்று இத்தால் கட்டப்பட்டதாகும். “யாமுடைந்துணையென்னுந் தோழிமாரும் எம்மில்முன் அவனுக்கு மாய்வராலோ” என்றது இங்கே அநுஸந்தேயம். தோழியானவள் ‘மடலெடுக்க வேண்டா’ என்று வாயாலே நிஷேதிக்கிறாளேயல்லது மடலெடுக்க வேண்டும்படியான நிலமை அவளுக்கும் உள்ளதேயென்று காட்டுதற்கே நம்மை’ என்றது.

English Translation

Sister! My red-lotus-eyed Lord has possessed me. I have lost the red in my cheeks, my frame has waned, my red lips and dark eyes have lost their colour. Now what can the world's gossip do to us?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்