விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாசு அறு சோதி*  என் செய்ய வாய் மணிக்குன்றத்தை* 
    ஆசு அறு சீலனை*  ஆதி மூர்த்தியை நாடியே* 
    பாசறவு எய்தி*  அறிவு இழந்து எனை நாளையம்?* 
    ஏசு அறும் ஊரவர் கவ்வை*  தோழீ என் செய்யுமே?*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாறு அறுசோதி - அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய
செய்ய வாய் - சிவந்த திருப்பவளத்தையுடைய
என் மணி குன்றத்தை - மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும்,
ஆக அது சீலனை - குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும்
ஆதி மூர்த்தியை - முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை

விளக்க உரை

(மாசறுசோதி.) பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி. முதலடியினால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற வடிவழகு பேசப்படுகிறது. “மடலெடுக்கை மாறு என்றிருக்கிறாள் தோழி; மடலெடாதொழிகை மாசு என்றிருக்கிறாளிவள். வ்யதிரேகத்தில் இப்படி. ஆற்றாமை விளையாததாகில் நாம் காண்கிற விஷயங்களேபாதியாமே- வடிவிலே யணைந்தவளாகையாலே முற்பட வடிவிலே மண்டுகிறாள்” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்க. வெறும் வடிவழகு மாத்திரத்தைக்கண்டு துடிக்கிரேனல்லேன்; அநவாயில் சில குணங்களையுங் கண்டு துடிக்கிறேன் காண் என்கிறாள்- ஆரறு சீலணை என்பதனால், ஆக என்றாலும் மாசு என்றாலும் குற்றம் என்பதே பொருள்; குற்றமற்ற சீலமானவது, கலக்கும்போது தன்பேறாகவே கலந்தபடி. பாசறவெய்தி = இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர். (1) பாசறவு என்று துக்கத்திற்குப் பெயர்; அதை எய்தி. (20) பாச அறவு - என்று பிரித்து, பாசு - பசுமைநிறமானது, அறவு- அழிந்துபோவது; ஸவவர்ணியமடைந்து என்றபடி. (3) பாசு என்று பாசமாய். (அதாவது பற்று) பந்துக்கள் பக்கல் பாசம் நீங்கி. (4) அற.

English Translation

Sister, I sought my ever-radiant faultless First-Lord, my red-lipped spotless mountain-gem. How long ago I-became impassioned and slipped into madness! What harm can the world's slander do now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்