விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலியுகம் ஒன்றும் இன்றிக்கே*  தன்அடியார்க்கு அருள்செய்யும்* 
    மலியும் சுடர் ஒளி மூர்த்தி*  மாயப் பிரான் கண்ணன் தன்னை*
    கலிவயல் தென் நன் குருகூர்க்*  காரிமாறன் சடகோபன்* 
    ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து*  உள்ளத்தை மாசு அறுக்குமே*.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் அடியார்க்கு - தன் அடியவர்களுக்கு
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே - கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி
அருள் செய்யும் - கிருபை பண்ணுகின்ற
மலியும் சுடர் ஒளி மூர்த்தி - மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும்
மாயம்  பிரான். - வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான

விளக்க உரை

(கலியுகமொன்று மின்றிக்கே) இத்திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகலவிதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார். தேவதாந்தரங்களிலுண்டான பரத்வஜ்ஞானமும், எம்பெருமானைப் பணிந்தும் அற்பப்பிரயோஜனங்களில் விருப்புற்றிருக்கையும் முதலியன மனமாக ஆகும்; இத்திருவாய்மொழியை ஓதவே அவை தீருமென்கிறது. கலியுகமொன்றுமின்றிக்கெ – “***“ * என்கிற பிரமாணம் இங்கு அறியத்தக்கது. எம்பெருமானை இடைவிடாது. நெஞ்சிலே கொண்டிருக்கை க்ருத்யுகம், அப்படிக் கொண்டிருக்கமாட்டாமை கலியுகம் என்றபடி. கலியுகமொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்கையாவது – தன்னை இடைவிடாது சிந்திக்களல்லராம்படி அநுக்ரஹித்தல்.

English Translation

This decad of the famous thousand songs, sung by Karimaran Satakopan of Kurugur surrounded by happy fields, addressed to the wonder-Lord, the radiant Krishna, destroyer of Kali, will cleanse devotees' hearts.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்