விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்*  வேதப் புனித இருக்கை* 
    நாவில் கொண்டு அச்சுதன் தன்னை*  ஞானவிதி பிழையாமே* 
    பூவில் புகையும் விளக்கும்*  சாந்தமும் நீரும் மலிந்து* 
    மேவித் தொழும் அடியாரும்*  பகவரும் மிக்கது உலகே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதம் புனிதம் இருக்கை - வேதத்தினுள் பரமபவித்திரமான புருஸூக்தம் முதலியவற்றை
நாவில் கொண்டு - நாவினால் உச்சரித்துக்கொண்டு
ஞானம் விதி பிழையாமே - பக்திமார்க்கம் தவறாதபடி
பூவில் - மலரோடு கூடின
புகையும் - தூபமும்
விளக்கும்-  தீபமும்

விளக்க உரை

(மேவித்தொழுது.) பகவத் பக்தர்கள் இருவகைப்படுவார்கள். பலவகைக் கைங்கரியங்களைச் செய்து போதுபோக்குவாரும், குணாநுபவத்திலே ஊன்றிப்போருவாரும், அப்படிப்பட்ட பக்தர்கள் பூமியெங்கும் பரந்தார்கள்; * வேதப்புனிதவிருக்கையென்று தொடங்கி * மேவித் தொழுமடியாகும் என்னுமளவும் கைங்கரிய ரிஷ்டங்களைச் சொல்லுகிறது. பகவரும் என்று குணாநுபவ நிஷ்டர்களைச் சொல்லுகிறது. (வேதப்புனித விருக்கை) வேதங்களுள் புனிதமான ருக்குக்களென்று புருஷஸூக்தம் நாராயணாநுவாகம் முதலியவற்றைச் சொல்லுகிறது. ஞானவிதியென்று பகவத்கீதையைச் சொல்லுகிறதாக ஸம்பிரதாயம், ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் பிரகரணத்தில் “பகவன் ஞானவிதி பணிவகையென்று இவரங்கீகரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்” என்ற சூர்ணிகை காண்க. “தொடர்ந்து அடிமை செய்யும் இளையபெருமாளையும், கிடந்தவிடத்தேகிடந்து குணாநுபவம் பண்ணும் ஸ்ரீபாதாழ்வானையும்போலே யிருப்பாரேயுரயித்து லோகமடைய” என்ற நம்பிள்ளை யீடுகாண்க.

English Translation

The world has become filled with devotees and holy men who lovingly worship Achyuta, unfailing in the path of knowledge, with blossomed flowers, incense, lamp, Sandal, water and Vedic Mantras. Devotees, you too join in loving worship, and liberate yourselves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்