விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்*  தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்* 
    மறுத்தும் அவனோடே கண்டீர்*  மார்க்கண்டேயனும் கரியே* 
    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா*  கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை* 
    இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி*  யாயவர்க்கே இறுமினே*.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நும் உள்ளத்து - உங்கள் நெஞ்சுக்குள்ளே
நிறுத்தி - வலியப்பிடித்து உட்காரவைத்து
கொள்ளும் - சிந்திக்கப்படுகின்ற
தெய்வங்கள் -தேவதைகள்
உய்யக்கோள் - உஜ்ஜீப்பித்துக்கொள்வதும்

விளக்க உரை

(நிறுத்திநும் முள்ளத்து.) எங்கும் பரமகாகவதர்களே மலிந்துவிட்டார்களென்று பரமஸந்தோஷம் பூரித்து நின்ற ஆழ்வார் காலதோஷத்தாலே சில அவைஷ்ணவர்களையும் கண்டார்; அவர்களை பகவத்பாகவத ப்ரவணர்களாயன்றிக்கே தேவதாந்தர ஸமாரராதன பரர்களாய் இருக்கிறபடியையுங் கண்டார்; அன்னவர்களையும் உபதேசத்தாலே திருத்தப் பார்த்து இப்பாசுரமருளிச் செய்கிறார். உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் கஷ்டப்பட்டு நிறுத்திக்கொள்ளுகிற தெய்வங்களானவை உங்களை அடியோடு ரக்ஷிக்கமாட்டா என்று நாம் சொல்லுகின்றிலோம். அவை செய்யும் ரக்ஷணம் நாராயணன் வழியாகவேயன்றி தாமாகவேயல்ல என்கிறோமத்தனை; இவ்விஷயத்திற்கு மார்க்கண்டேயனே ஸாமியாயிரா என்கிறார் முன்னடிகளில். கீழ் * ஒன்றுந்தேலில் “புக்கடிமையினால் தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை, நக்கயிரானுமன் துய்யக் கொண்டது நாராயணனருகே” என்றவிடத்து யாம் உரைத்தவை இங்கு அறியத்தக்கன. “மார்க்கண்டேயனும் கரியே” என்றவிடத்து ஈடு- “இவ்வர்க்கத்துக்கு ஸரக்ஷி மார்க்கண்டேயன்; அவன் நெடுநாள் தேவனை ஆச்சரயிக்க அவனைப்பார்த்து ‘நெடுநாள் நீ நம்மை ஆச்ரயித்தாய்; இவ்வாச்ரயணம் பாழே போகவொண்ணாது; உன்னோடு என்னோடு வாசியில்லை. உனக்கொரு புகல் காட்டித்தரப்போரு’ என்று பக்கலிலே கொண்டு சென்று அவனபேக்ஷிதத்தைத் தலைக்கட்டிக் கொடுத்தாள்; ஆனபின்பு இதில் ஸாஷி அவனே” என்பதாம்.

English Translation

Know that your fond gods can save you only through His grace; Markandeya is proof. Have no double, there is no god other than Krishna, All that exists are his forms, so worship him alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்