விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே*  ஒக்கின்றது இவ் உலகத்து* 
    வைகுந்தன் பூதங்களே ஆய்*  மாயத்தினால் எங்கும் மன்னி*
    ஐயம் ஒன்று இல்லை அரக்கர்*  அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்* 
    உய்யும் வகை இல்லை தொண்டீர்!*  ஊழி பெயர்த்திடும் கொன்றே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செய்கின்றது - இவர்கள் செய்கிற காரியம்
என் கண்ணுக்கு - நான் பார்க்குமிடத்து
ஒன்றே ஒக்கின்றது -ஒன்றுபோலவே யிரா நின்றது;
இ உலகத்து - இவ்விபூதியிலே
வைகுந்தன் பூதங்களே - பகவத்பக்தர்களே

விளக்க உரை

(செய்கின்றது). இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார். எங்குபார்த்தாலும் பாகவத கோஷ்டியொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு. மாய்த்தினாலெங்கும் மன்னி = ஸ்ரீவைகுண்ட நாதனுடைய பக்தர்களான நித்யரும் முக்தரும் ஆச்சரியமாக எங்கும் புகுந்திருக்கிறார்கள் என்கை. மாயம் என்று ஆச்சரியத்தைச் சொல்லுவதன்றிக்கே *** ஸம்பவாமி ஆத்மமாயயா” இத்யாதிஸ்தலங்களிற்போல இச்சையென்கிற பொருளையும் சொல்லுமாதலால் ‘இச்சையாலே’ என்று நம்பிள்ளையருளிச்செய்யும்படி *** என்கிற உபநிஷத்தின்படி திருநாட்டிலுள்ளவர்கள் இந்நிலத்திற்குத் திரும்புதல் இல்லையாயிருக்க, அவர்கள் இங்கு எப்படி வரக்கூடும்? என்று சங்கிக்கவேண்டா; கருமமடியாகத் திரும்புதல் இல்லையென்றதே தவிர, இச்சையாலே திரும்புதலும் இல்லையென்று சொல்லிற்றில்லை; *** என்று உபநிஷத்துதானே ஓதிற்றுண்டே. இது தோன்றவே மாயத்தினால் என்பதற்கு “இச்சையாலே” என்று பொருள் பணித்தது.

English Translation

The Lord's spirits have miraculously entered the Earth. They stand everywhere, their acts alone occupy my vision. Have no doubt, Devotees, if there are Asuras and Rakshasas among you, there is no escape; their days will end in death.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்