விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரியும் கலியுகம் நீங்கி*  தேவர்கள் தாமும் புகுந்து* 
    பெரிய கிதயுகம் பற்றி*  பேரின்ப வெள்ளம் பெருக* 
    கரிய முகில்வண்ணன் எம்மான்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    இரியப் புகுந்து இசை பாடி*  எங்கும் இடம் கொண்டனவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரியும் - தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான
கலியுகம் - கலியுகமானது
நீங்கி - தொலையப்பெற்று
பெரிய- தருமந் சிறந்த
கிதயுகம் - கிருதயுகமானது

விளக்க உரை

(திரியும் கலியுகம்) நித்யஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்றுகூடிப் பரிமாறலாம்படி ஸம்ஸாரமண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார். திரியுங் கலியுகம் நீங்கி = கலிபிறந்த நாற்பத்துமூன்றாநாளிலே ஆழ்வார் அவதாரித்தாரென்று பெரியார் கூறுவர்; இன்னமும் நெடுங்காலம் தான் செங்கோல் செலுத்துவதாக வந்துபுகுந்த கலிபுருஷன் சிதையும்படியாயிற்று ஆழ்வாருடைய பெருமை. திரியுங் கலியுகமென்றது தருமமார்க்கம் ருஜுவாக இருக்கையன்றிக்கே தலைகீழாக இருக்கும்படியான கலியுகமென்றபடி. மஹாபாரதத்தில் மோக்ஷதர்மத்தில் - “*** = ந ச்ருண் வந்தி பிது; புத்ரா ந ஸ்நுஷா ந ஸஹோதரர்ந ப்ருத்யா ந கலத்தராணி பவிஷ் யத்யதரோத்தரம்.” என்று சொல்லிற்று; கலியுகத்தில் தகப்பன் பேச்சை மகன் கேளான்; மாமியார் பேச்சை மாட்டுப்பெண் கேளாள்; தமையன் பேச்சைத் தம்பி கேளான்; ஸ்வாமியின் பேச்சை வேலைக்காரன் கேளான்; கணவன் பேச்சை மனைவி கேளாள்; எல்லாம் தலைகீழாகவே ஆகப்போகிறது என்பது அந்த சுலோகத்தின் பொருள். ஆழ்வார் அதைத் திருவுள்ளம்பற்றித் திரியுங் கலியுக மென்கிறார்.

English Translation

The rolling age of Kali is ending, the gods have also entered. The golden age of Krita is beginning, and joy is flooding the land. The spirits of my ocean-hued Lord have come singing songs. They cramp the Earth and occupy every nook.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்