விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டோம் கண்டோம் கண்டோம்*  கண்ணுக்கு இனியன கண்டோம்* 
    தொண்டீர்! எல்லீரும் வாரீர்*  தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*
    வண்டுஆர் தண் அம் துழாயான்*  மாதவன் பூதங்கள் மண்மேல்* 
    பண் தான் பாடி நின்று ஆடி*   பரந்து திரிகின்றனவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு ஆர் - (மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய
தண் அம் துழாயான் - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான
மாதவன் - திருமாலினது
பூதங்கள் -பக்தர்கள்
மண் மேல் - இந்நிலத்திலே

விளக்க உரை

(கண்டோங்கண்டோம்.) ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார். தம்மால் அழைக்கப்படுகின்றவர்கள் விரைந்து ஓடிவர ஆசைப்படுதற்குறுப்பாக. “கண்மோங் கண்டோங் கண்டோம்” என்று பெருமிடறு செய்கிறார்போலும். கீழே * நண்ணாதார் முறுவலிப்பவிலே “கொடுவுலகங் காட்டேலே” என்ற சொல்லும்படியாக அபகவதர்களைக்கண்ட கசப்புத்திர ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியைக் கண்ணாரக் காணப் பெறறோமென்கிறார் கண்ணுக்கினியன கண்டோம் என்று. தொண்டீர்! எல்லோரும்வாரீர் = “மெய்யடியார்கள் தம் ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண்பயனாவதே” என்றும் “பேராளன் பேரோலும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றும் பாகவத கோஷ்டியின் சுவடறிந்திருக்கு மவர்களே! நீங்கள் ஒருவர் தப்பாமல் கடுக வாருங்கள். எதற்காக வென்ன; தொழுது தொழுத நின்று ஆர்த்தும் = இந்திரளைத் தொழுகைதானே பரம ப்ரயோஜனமன்றோ? ப்ரயோஜனத்துக்கொரு ப்ரயோஜனம் பண்ணுவோம் என்றபடி.

English Translation

We have seen sights that are sweet to the eyes, yes we have, yes we have! Come devotees, offer worship, praise and shout in joy. The spirits of the Tulasi-wreathed Madavan are roaming the Earth. They are seen standing, singing panns and dancing everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்