விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆவார் ஆர் துணை என்று*  அலை நீர்க் கடலுள் அழுந்தும்- 
    நாவாய் போல்,*  பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,* 
    தேவு ஆர் கோலத்தொடும்*  திருச் சக்கரம் சங்கினொடும்,* 
    ஆஆ என்று அருள்செய்து*  அடியேனொடும் ஆனானே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துணை ஆவார் ஆர் என்று - காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு
அலை நீர் கடலுள் அழுந்தும் - அலையெறிகின்ற கடலினுள்ளே அமிழ்ந்துகிற
நாவாய் போல் - படகுபொலே
நான் - அடியேன்
பிறவி கடலுள் - ஸம்ஸாரக்கடலினுள்ளே

விளக்க உரை

(ஆவாரார் துணை.) இந்த ஸம்ஸார மண்டலத்திலே இதுகாறும் நான் பட்ட கிலேசங்களெல்லாம் தீர எம்பெருமான் தன்னுடைய பொருளாலே அபாராக்ருதமான வடிவோடேவந்து என்னோடே கலந்தானென்கிறார். நாவாய் என்று கப்பலுக்குப் பெயர்; இங்குக் கப்பலையே பொருளாகக் கொள்ளலாம்; இலக்கணையால் கப்பலுள்ளவர்களையும் பொருளாகக்கொள்ளலாம். கப்பலையே பொருளாகக் கொள்ளும்போது, கரையிலுள்ளவர்கள் ஆவுரார் துணையென்று கதறும்படியாக ஒரு கப்பல் கடலுள்ளே அழுந்துமாபோலே என்றதாகக் கொள்க. இப்பொருளில், துணையென்று என்றது ‘துணையென்ன’ என்றபடி, கரு கப்பலான கடலுக்குள்ளே அழுந்திப் போருங்காலத்தில் அதைக் காணும் தடஸ்தர்கள் ‘ஐயோ! இப்படி நீரினுள்ளே அழுந்துகின்ற இக் கப்பலுக்குக் கைகொடுப்பார் யாருமில்லையே!’ என்று கதறுவார்கள்; அவ்வண்ணமாக அழுந்துகின்ற கப்பல்போலே என்றபடி. நோவு படுகிறோமென்கிற உணர்த்திகூட இல்லாமைக்காக இந்த த்ருஷ்டாந்தம்.

English Translation

Like a ship caught in stormy ocean signalling in distress, I stood shivering in the ocean-of-birth and called. With exceeding grace and divinity, he heard me and came to me, with a conch and discus in hand and became one with me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்