விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மின் ஒத்த நுண்- இடையாய்!*  மெய்- அடியேன் விண்ணப்பம்* 
  பொன் ஒத்த மான் ஒன்று*  புகுந்து இனிது விளையாட*
  நின் அன்பின் வழிநின்று*  சிலை பிடித்து எம்பிரான் ஏகப்* 
  பின்னே அங்கு இலக்குமணன்*  பிரிந்ததும் ஓர் அடையாளம்*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மின் ஒத்த - மின்னலைப்போன்ற;
நுண்  இடையாய் - மெல்லிய இடையையுடையவளே!;
மெய் அடியேன் - உண்மையான பக்தனாகிய எனது;
விண்ணப்பம் - விண்ணப்பத்தை (க் கேட்டருளவேணும்;);
பொன் ஒத்த - பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய);

விளக்க உரை

சூர்ப்பணகையினால் தூண்டப்பட்டுச் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்லக் கருகிய இராவணனது கட்டளையினால் அவனுக்கு மாமன் முறையான மாரீசன் என்ற ராக்ஷஸன் மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே பிராட்டியினெதிரிற் சென்று உலாவுகையில், இளையபெருமாள் இது மாயமானென்று சொல்லவுங் கேளாமல், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி அதனைப் பிடிப்பதற்கு இராமபிரான் நெடுந்தூரம் தொடர்ந்து சென்றும் பின்னும் ஓட்டங்காட்டிய அதனை மாயமானென்றறிந்து அம்பெய்து வீழ்த்த, அம்மாரீசன் இறக்கும்போது ‘ஹா! ஸீதே! ஹா! லக்ஷ்மணா! ஹா!!’ என்று இராமபிரான் கதறுவதுபோலக் கூப்பிட, அதனைக் கேட்ட ஸீதை, லக்ஷ்மணன் தேற்றவுந் தேறாமல் இராமபிரானுக்கே ஆபத்து வந்திட்டதென்று பலவாறு இளையபெருமாள் மீது கடுஞ்சொற்களைச் சொல்ல, உடனே இளையபெருமாள் இராமபிரானுள்ள இடத்திற்குப் போவதாகச் சீதையை விட்டிட்டுச் சென்றனனென்ற இதுவும் ஓரடையாள மென்பதாம் ..... (எ)

English Translation

O Lady of lightning-thin waist! Your humble slave submits. A gloden deer came and played before you. For the love of you, my Lord left with his bow, then Lakshmna too became separated.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்