விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் கொள்வன் உன்னை விட்டு என்னும்*  வாசகங்கள் சொல்லியும்,* 
    வன் கள்வனேன் மனத்தை வலித்து*  கண்ண நீர் கரந்து,* 
    நின்கண் நெருங்கவைத்தே*  எனது ஆவியை நீக்ககில்லேன்,* 
    என்கண் மலினம் அறுத்து*  என்னைக்கூவி அருளாய்கண்ணனே!         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணனே - எம்பெருமானே!
வன் கள்வனேன் - பஹாரக்கள்வனாகிய நான்
உன்னைவிட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும்- ‘உன்னைவிட்டு வேறு எதைக்கொள்வேன்! என்கிற கபடவார்த்தைகளைச்சொல்லியும்
மனத்தை வலிந்து - விஷயார்தரங்களில் ஊன்றின செஞ்சை பலாத்காரமாக மீட்டு
கண்ண நீர் சுரந்து - அவ்விஷயாந்தரங்களை அநுபவிக்கப் பெறாமையாலாகும் துக்கத்தையும் மாற்றி

விளக்க உரை

(என் கொள்வான்) இதற்கு முன்பெல்லாம் இப்படி உன் பக்கல் பொய்னாய்ப் போந்தது ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலேயாதலால் அந்த ப்ரக்ருதிஸபந்தததைப் போக்கித்தரவேணுமென்கிறார். (இப்பாட்டுக்கு மற்றொருவகையான அவதாரிகையும் உண்டு;) கீழ்ப்பாட்டில் “உன்னைக் கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே” என்றார்; அந்தக் காட்சி மாநஸமான காட்சியாயிருந்தது; காட்சிக்குப் பிறகு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே ருசி பிறக்கமாகையாலே கையை நீட்டினார். கைக்கு அகப்படாமையாலே தளர்ந்து, இப்படி எம்பெருமான் நம்முடைய கைக்கு அகப்படாமைக்குக் காரணம் தேஹஸம்பந்தமா யிருந்ததென்று உணர்ந்து, இவ்விரோதியை நீயேபோக்கி உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார் - என்று சில ஆசாரியர்கள் நிர்வஹப்பர்கள். உன்னைவிட்டு என்கொள்வனென்னும் வாசகங்கள் சொல்லியும் = சிறந்த பரமைகாந்திகளன்றோ இவ்வார்த்தை சொல்லத் தகுந்தவர்கள்; உன்னைத் தவிர மற்ற வஸ்துக்களிலேயே காலாழ்ந்து திரிகின்றயான் “உன்னையொழிய வேறு எதைக்கொள்வேன்?” என்று சொல்லத்தகுந்தவனோ? அல்லனாயினும், வாயாலே இங்ஙனம் பச்சைப்பசும்பொய் பேசிக்கொண்டு திரிந்தேனென்கிறார். அதற்கு இப்போது அநுதபித்து வன்கள்வனேன் என்கிறார்.

English Translation

Though I say words like, "What other refuge do I hae", -the rogue that I am, -I have not the power to wean my soul from the world, nor strengthen my heart, nor dry my tears, and move closer to you. My Krishna, rid me of my dross and call me unto you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்