விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உள்ளன மற்று உளவா*  புறமே சில மாயம் சொல்லி,* 
    வள்ளல் மணிவண்ணனே!*  என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
    கள்ள மனம் தவிர்ந்தே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,* 
    வெள்ளத்து அணைக்கிடந்தாய்*  இனி உன்னை விட்டு என் கொள்வனே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெள்ளத்து - திருப்பாற்கடலிலே
அணை - (திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது
கிடந்தாய் - பள்ளிகொள்ளும் பெருமானே!
உள்ளன - எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன்
மற்று உள் ஆ - உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும்

விளக்க உரை

(உள்ளன) முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக்கொண்டிருந்த வாற்றைச்சொல்லி, பின்னடிகளால் - அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடுகூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார். மனத்தினுள் நடையாடுகின்ற எண்ணங்களோ வேறுபட்டவை; வெளியே வாயாற் சொல்லுகிறவாசகங்களோ புறப்பூச்சான பொய்யுரைகளேயாம்; எம்பெருமானுடைய ஔதார்யம் முதலிய குணங்களிலும் வடிவழகிலும் மிக ஈடுபட்டவன்போல ‘வள்ளலே! மணிவண்ணனே!’ என்று பலகாலுஞ்சொல்லி * உள்ளவாருள்ளிற்றெல்லா முடனிந்தறியும் அப்பெருமானையும் வஞ்சிக்கும்படியான கள்ளமனமுடையவனானகவே யிருந்தேன்; அப்படிப்பட்ட நான் அந்தக் கள்ளமனம் தவிரப்பெற்ற உஜ்ஜீவிக்கவல்லவனாயினேன். இனி வேறுவழிகளிலே செல்ல ப்ரஸக்தியில்லை என்றாயிற்று. “வஞ்சக்கள்வன் மாமாயன்” என்று ப்ரஸித்தி பெற்றிருக்கிற எம்பெருமானையும் வஞ்சிக்கவல்லவனாயினேன் என்பது தோன்ற ‘உன்னையும்’ என்று உம்மைகொடுத்துப்பேசினார்.

English Translation

I uttered in lip-service,-while inside was something else, -a few lies like "Benevolent Lord, Gem-hued Lord" and such words. Shedding my deceiving nature, I have seen you, and found liberation. O Lord reclining in the ocean, now what other refuge do I have?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்