விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போனாய் மாமருதின் நடுவே*  என் பொல்லா மணியே,* 
    தேனே! இன்அமுதே!'*  என்று என்றே சில கூத்துச்சொல்ல,* 
    தானேல் எம்பெருமான்*  அவன் என் ஆகி ஒழிந்தான்,* 
    வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா மருதிந் நடுமே - பெரிய மருதமரங்களினிடையே
போனாய் - தவழ்ந்து சென்றவனே!
என் - எனக்கு விதேயமான
பொல்லா மணியே - துளைபடாத ரத்தினம் போன்றவனே!
தேனே - தேன்போன்றவனே!

விளக்க உரை

(போனாய்) கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை கண்ணனைத் திருவயிற்றில் கயிற்றினால் கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே யெழுந்தருள, அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்ட படியினால் அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தனவென்பது யமளார்ஜுனகதை. அக்காலத்திலலே யசோதைப் பிராட்டிக்கண்டு, ஐயோ! பிள்ளைக்கு ஏதோ அநர்த்தனம் வந்துவிட்டதென்று அஞ்சி “என்னப்பா! மாமருதின்நடுவே போனாயே!” என்று வயிரெறிந்து பேசினள்; உண்மையில் அவள் பரிவு உடையவளாகையாலே அங்ஙனம் பேசத் தகும்; அவளுடைய பரிவில் ஆயிரத்திலொன்று கூட இல்லாத நான் அப்படிப் பட்ட பரிவு எனக்கு மிருப்பதாகப் பாவனைகாட்டி, “என்தேனே! என் இன்னமுதே! என் பொல்லாமணியே! மாமருதின் நடுவேபோனாயே!” என்று நானும் பேசினேன்; இது கபடமான உத்தியாயிருக்கச் செய்தேயும் இதையும் நெஞ்சு கனிந்துசொன்ன சொல்லாக்கொண்டு எம்பெருமான் என்னுள்ளே ஸபரிகரமாக வந்து புகுந்தருளினானே! இது என்ன ஆச்சரியம்! என்று உள்குழைகின்றார். இரண்டாமடியில் ‘கூற்று’ என்பது பன்னிராயிரப்படியின் பாடம்; ‘கூத்து’ என்பது மற்ற வியாக்கியானங்களின் பாடம். கூறப்படுவது கூற்று; என்றபடி. ‘கூத்து’ என்னம் பாடத்தில். சிலருடைய செயலை வேறு சிலர் அநுகரிப்பது கூத்தாகையாலே கபடமென்றவாறு.

English Translation

I only spoke false worlds like, "Oh, you entered the Marudu trees!", "My uncut Gem!", My ambrosia, sweet as honey!", Lo, my Lord himself has become me. The sky and Earth and all else are within me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்