விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கை ஆர் சக்கரத்து*  என் கருமாணிக்கமே! என்று என்று,* 
    பொய்யே கைம்மைசொல்லி*  புறமே புறமே ஆடி.* 
    மெய்யே பெற்றொழிந்தேன்,*  விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
    ஐயோ கண்ணபிரான்!*  அறையோ இனிப்போனாலே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புறமே புறமே ஆடி - விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும்
மெய்யே பெற்றறோழிந்தேன் - மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்;
விதி வாய்க்கின்று - பகத்திருபை பலிக்குமிடத்தில்
காப்பர் ஆர் - அதைத் தடுக்கவல்லார் யார்?
கண்ணபிரான் - ஸ்ரீக்ருஷ்ணனே!

விளக்க உரை

(கையார் சக்கரத்து) நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து, பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல, அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார். எம்பெருமான் கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்பு உண்மையிலே நெஞ்சை உருக்குமதாயிருந்தாலும் இரும்புபோல் வலிதான என்னுடைய நெஞ்சம் அதிலே ஈடுபட்டிலது; ஆனாலும் ஈடுபட்டவர்கள் பேசுகிற பாவனையிலே “கையார் சக்கரத்தென் கருமாணிக்கமே” என்ற பேசினேன்; இப்படி ஒரு தடவை சொல்லி நிற்காதே பலதடவை சொன்னேன்; பல்லாயிரந்தடவை சொன்னாலும் உள்கனிந்து சொன்னால் அழகியதே; அப்படியன்றிக்கே எம்பெருமானையும் வஞ்சிப் பதற்காகச் சொன்னேனத்தனை. வாயாற்சொல்லுவதோ இது; நடத்தையோ விஷயப்ராவண்யமேயாயிற்று. அப்படியிருந்தும் மெய்யன்பர் பெறும்பேற்றை நானும் பெற்றுவிட்டேன்; பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் பேற்றை நானும் பெற்றுவிட்டேன். பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் எங்ஙனம் பெறமுடியும் என்று சிலர் சங்கிக்கக்கூடும்; (விதிவாய்க்கின்று காப்பாரார்?) எம்பெருமானுடைய அருளிவெள்ளம் கரையுடைந்து பெருகப்புகுந்தால் எம்பெருமானறன்னாலும் அணைசெய்யமுடியாதன்றோ.

English Translation

Uttering, "Holder of bright discus!", "My gem-hued Lord!", and many such shallow praises, I roamed and danced, and attained the truth, who can prevent what fortune favous? My Lord, Krishna, if you leave me now, will I let you go?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்