விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்*  வண் குருகூர்நகரான்*
    நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்*  மாறன் சடகோபன்,* 
    வேட்கையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,* 
    மீட்சி இன்றி வைகுந்த மாநகர்*  மற்றது கையதுவே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆள் செய்து - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி
ஆழி பிரானை சேர்ந்தவன் -ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும்
வண் குருகூர் நகரான் - திருநகரிக்குத் தலைவரும்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான
மாறன் சடகோபன் - ஆழ்வார்

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது. (ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்) ஆட்செய்கையாவது கைங்கரியம் பண்ணுதல் இது மாநஸிகமென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூவகைப்பட்டிருக்கும்; இங்கு வாசிகைங்கரியம் கொள்ளத்தகும். எம்பெருமான் கையுந் திருவாழியுமான அழகைக்காட்டித் தம்மை ஆட்படுத்திக் கொண்டானென்பது தோன்ற ஆழிப்பிரானை என்றார். முதலடிக்கு ஈட்டு ஸ்ரீஸுக்திகள் பரமபோக்யங்களாயிருக்கையாலே அவை ஈண்டுக் குறிப்பிடப் பெறுகின்றன;-“அடிமைதான் த்ரிவிதம்-மாநஸ வாசிக காயிகங்கள். இவற்றில் மாநஸகாயிகங்களுக்கு ஆளல்லர்; என்றிய வென்னில், *காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்* என்கையாலே. இனி வாசிகமொன்றுமேயானால் வாசிகமாக திருவாய்மொழி பாடி அடிமை செய்தாரென்கிறதோ வென்னில்; அன்று; அப்படியாமன்று இப்பாசுரம் *முனியே நான்முகனிலேயாகவேணும். இல்லையாகில் இவர் வாசிகமாக அடிமை செய்த *புகழுநல்லொருவனிலேயாகப் பெறில் முக்க்யம்;. ஆனால், தேவதாந்தரபரத்வ நிரஸநபூர்வகமாக ஸர்வேச்வரனுடைய பரத்வத்தை யருளிச் செய்கையாலே யானாலோவென்னில; அதுவாகில் முதல் திருவாய்மொழியிலே யாகவமையும். பரத்வநிர்ணயத்திலே பரோபதேசமு மாகை யாலே யானாலோவென்னில், அதுவாகில் *திண்ணன் வீட்டிலேயாதல்* அணைவதரவணையிலே யாதலாகவமையும். ஆனால் அர்ச்சாவதாரத்திலே பரத்வமருளிச் செய்கையாலே யானாலோவென்னில்; அதுவுமொண்ணாது.

English Translation

This decad of the faultless thousand songs, sung with love by kurugur city's maran satakopan addresses Adiprian, Lord of discus and Vakula flower-garlands, Those who master it will have access to the other Vaikunta as well, the city of no return

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்