விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருவடியை நாரணனை*  கேசவனை பரஞ்சுடரை,* 
    திருவடி சேர்வது கருதி*  செழுங் குருகூர்ச் சடகோபன்,* 
    திருவடிமேல் உரைத்த தமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    திருவடியே அடைவிக்கும்*  திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரு அடி மேல் - ‍அவனது திருவடிகளின் மீது
உரைத்த - அருளிச்செய்த
திரு அடியே - அந்தத் திருவடிகளையே
அடைவிக்கும் - அடையப்பண்ணும்;
திரு அடி சேர்ந்து - அந்தத் திருவடிகளைக் கிட்டி

விளக்க உரை

(திருவடியை காரணனை) இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறகு. முதலடியில் திருவடி யென்றது ஸர்வஸ்வாமி யென்றபடி. கேசவன் என்ற திருநாமம் மூன்று வகையான பொருள்களைக் கொண்டிருக்கும். 1. சிறந்த மயிர்முடியையுடையவன். 2. கேசியென்னும் அசுரன் (ஸ்ரீ க்ருஷ்ணவதாரத்தில்) வதஞ்செய்தவன். 3. பிரமனுக்கும் சிவபிரானுக்கும் நியாமகன்-என்பன மூன்று அர்த்தங்கள். இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்று கிட்டவேணுமென்கிற மனோரதத்தையுடையவராய ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்துள் இப்பத்துப்பாசுரமும் சடக்கென பகவத் பாதாரவந்த ப்ராப்தியைப் பண்ணுவிக்கும்; ஆகையால், பக்தர்காள்! நீங்கள் இங்குள்ளவளவும் இத்திருவாய்மொழியைக் கொண்டு அவனது திருவடிவாரத்திலே கைங்கரியம் பண்ணிப்போருங்கோள்-என்றதாயிற்று.

English Translation

This decad of the thousand pure Tamil songs, by prosperous kurugur city's satakopan, is addressed to the feet of effulgent Narayana, Kesava, Sung with humility, it will secure the Lord's feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்