விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மான் அமரும் மென்நோக்கி!*  வைதேவீ! விண்ணப்பம்*
  கான் அமரும் கல்-அதர் போய்க்*  காடு உறைந்த காலத்துத்* 
  தேன் அமரும் பொழிற் சாரல்*  சித்திரகூடத்து இருப்பப்*
  பால்மொழியாய்! பரதநம்பி*  பணிந்ததும் ஓர் அடையாளம*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மான் அமரும் - மானையொத்த
மென் நோக்கி - மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய் - பால்போல் இனியபேச்சை யுடையவளே!
கான் அமரும் - காட்டில் பொருந்திய
கல் அதர் போய்-  கல் நிறைந்த வழியிலேயே

விளக்க உரை

பெருமாள் காட்டுக்கெழுந்தருளினபடியை அறிந்த பரதாழ்வாள் எப்படியாயினும் அவரைமீட்டு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரவேனுமெனக்கருதிப் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சித்திரகூடத்தில்வந்து பெருமாள் திருவடிகளில் ப்பரபத்திபண்ணினதை அடையாளமாகக் கூறியவாறு. தன் இனத்தைப்பிரிந்து செந்நாய்களின் திரளால் வளைக்கப்பட்டு அவற்றின்நடுவே நின்று மலங்க மலங்க விழிப்பதொரு மான்பேடு -அநுகூல ஜனங்களைப்பிரிந்து கொடிய ராக்ஷகணங்களாற் சூழப்பட்டு அவர்களுடைய மருட்டலால் மனங்கலங்கியிருக்கும் பிராட்டிக்கு ஏற்ற உவமையாம்.

English Translation

O Vaidehi of milk-sweet speech and doe-like looks! I submit: Passing through the rocky trail furing exile in the forest, when Rama stayed in Chitrakupta in the shade of nectared bowers, the younger brother Bharata came after him and fell prostrate. This here is another proof.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்