விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூட்டுதி நின் குரை கழல்கள்*  இமையோரும் தொழாவகைசெய்து,* 
    ஆட்டுதி நீ அரவு அணையாய்!*  அடியேனும் அஃது அறிவன்,* 
    வேட்கை எல்லாம் விடுத்து*  என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  கூட்டினை நான் கண்டேனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இமையோரும் - (ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும்
தொழா வகை செய்து - கண்டு அநுபவியாதபடி பண்ணி
ஆட்டுதி - அலைக்கின்றாய்;
அஃது - இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை
அடியேனும் - நானும்

விளக்க உரை

ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக்கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம். கூட்டுநின் குரை கழல்கள்=சிலரைத் திருவடி சேர்த்துக்கொள்ளத் திருவுள்ளம்பற்றினால், அவர்கள் எவ்வளவு தண்ணியர்களாயிருந்தாலும் தன்னுடைய சக்தியே காரணமாக அவர்களைத் திருவடி சேர்த்துக்கொள்ளுகிறாயென்கை. இன்னாரினையாரென்று பாராமல், உகந்தாரைத் திருவடி சேர்த்துக்கொள்ளுதல் உன்னுடைய இயல்வு என்றபடி. இமையோரும் தொர்வகைசெய்து ஆட்டுதி=பிரமன் முதலிய பெரியோர்களேயாகிலும் உகப்புக்கு இலக்கு ஆகாதவர்களை வந்து கிட்டாதபடிபண்ணி அலைக்கின்றா யென்றபடி. அடியேனும் அது அறிவன்=விருப்பமுண்டானால் சிலர்க்கு எளியனாகியும், விருப்பமில்லையாகில் சிலர்க்கு அரியனாகியும் போருகின்றா யென்கிற இந்த உன்படியை நான் அறிந்து கொண்டே யிருக்கின்றேன் என்று கூறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! இப்போது நீர் அறிந்துகொண்டது என்ன?’ என்று கேட்க; இப்போது என்னை நீ விஷயீகரிக்கத் திருவுள்ளம்பற்றினபடியாலே திருவடியோடே என்னைச் சேர்த்துக்கொண்டாயே! இதுதான் நான் கண்டது என்கிறார்.

English Translation

O Lord on serpent couch, you make even gods roam without redemption. I know this too, shearing me of my desires, you have made me bear your feet and roam, I now see that I am inseparable from your precious lotus feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்