விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆயே! இவ் உலகத்து*  நிற்பனவும் திரிவனவும்* 
    நீயே மற்று ஒரு பொருளும்*  இன்றி நீ நின்றமையால்,* 
    நோயே மூப்பு இறப்பு பிறப்பு*  பிணியே என்று இவை ஒழிய,* 
    கூயேகொள் அடியேனை*  கொடு உலகம் காட்டேலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீயே ஆய் - நீயாகவே யிருந்து
மற்று ஒரு பொருளும் இன்றி - நீயல்லாத பொருள் வேறொன்றுமில்லாதபடி
நீ நின்றமையால் - நீயிருப்பதனாலே
நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்ற இவை ஒழிய - மனோவியாதி, கிழத்தனம், ஜனனமரணங்கள், சரீரபீடைகள் எனப்படுகிற இவை தொலையும்படி
அடியேனை - அடியனான வென்னை

விளக்க உரை

ஆழ்வீர்! உம்மை நானழைத்துக்கொள்வதென்று ஒன்றுண்டோ? பேறு உம்மதான பின்பு நீர்தாமே முயற்சிசெய்து வந்து சேரக்கட வீரத்தனை” என்று எம்பெருமான் திருவுள்ளமானதாகக்கொண்டு, ஸகல பதார்த்தங்களும் நீயிட்டவழக்கான பின்பு நீயே யுன்னைக்கிட்டும்வழி பார்த்தருளவேணமென்கிறார். ஆயே! என்பதற்கு மூன்றுபடியாகப் பொருள் கொள்ளலாம்; தாயே! என்று எம்பெருமானை விளிக்கிறபடி; அந்தோ! என்றபடி; “இவ்வுலகத்து நிற்பனவுந் திரிவனவும் நீயே ஆய்” என்று மேலே கூட்டுகிறபடி. “தேந லிநா த்;ருணாக்ரமபிந சலதி” என்கிறபடியே ஸகல ஜங்கமஸ்தாவரங்களையும் அநுப்ரவேசித்து ஆட்டிவைப்பவன் நீயேயானபின்பு எனக்கு நான் ஒரு நன்மைதேடிக்கொள்வதுண்டோ? பத்த ஸம்ஸாரிகளில் நின்றும் என்னை வேறுபடுத்தி முமுக்ஷவாக ஆக்கிவைத்த நீயே முக்தனுமாக்கிவைத்தருளவேணும் என்றாராயிற்று. மூப்பு பிறப்பு-முப்புப்பிறப்பு என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘மூப்பிறப்பு’ என்றானது தொகுத்தல் புண்ர்ச்சி. “ஒண் சங்கதை வாளாழியான்” என்றவிடத்தறிபோல. பிணி-தாரித்ரியமுமாம். கொடுவுலகம் காட்டேல்=இவ்வுலகத்தின் கொடுமையைத் தவிர்த்து இவ்விபூதிதன்னையே நித்ய விபூதியாக்கிக் காட்டித்தரவல்லையேல் காட்டுவாயாக, என்பது உட்கருத்து.

English Translation

When you are yourself the sentient and the insentient in this world, existing for no reason, other than itself, pray do not show me a wicked world-scene of disease, age, birth, earth and misery. Call me, you must!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்