விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொள் என்று கிளர்ந்து எழுந்த*  பெரும் செல்வம் நெருப்பு ஆக,* 
    கொள் என்று தமம் மூடும்*  இவை என்ன உலகு இயற்கை?* 
    வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,* 
    வள்ளல் செய்து அடியேனை*  உனது அருளால் வாங்காயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொள் என்று - அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக
தமம் மூடும்இ இவை உலகு இயற்கை என்ன - தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே!
வள்ளலே - மஹாதாரனே!
மணி வண்ணா - நீலமணிவண்ணனே;
உன கழற்கே வரும் பரிசு - உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி

விளக்க உரை

(கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்தஹேது என்பதைக் கட்கூடாகக் காணாநிற்கச்செய்தேயும், பின்னையும் மேல்விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோகயாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார். நெருப்புக்கு ஆச்ரயாசம் என்று பெயர்; தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது நெருப்பின் இயல்பு; அதுபோலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் காணநிற்கச் செய்தேயும்-என்பது முதலடியின் கருத்து. செல்வம் விஞ்சி ஜீவிக்கப் பெறுமவர்களை அச்செல்வமே காரணமாகப் பொறாமையாளர்கள் சித்திரவதம் செய்வது உலகவியறகையாதரால் ஆழ்வார் இங்ஙனே யருளிச்செய்தது மிகப் பொருந்தும். நெருப்பாக என்றவிடத்தில் தொக்கியிருப்பதாகக் கொள்ளவேணும். கொள்ளென்று தமமுடும் = “பகல்கண்ட குழியிலே இராவிழுவாரைப் போலே” என்று ஒரு த்ருஷ்டாந்தம் அடிக்கடி ஆசாரியங்களி ஸாதிப்பதுண்டு; அதாவது, ஓரிடத்தில் ஒரு பெரிய பள்ளமிருக்கும்; அதனைப் பகலில் நன்றாகக் கண்டிருக்கச் செய்தேயும் இரவில் இருளிலே செல்லும்போது ஸ்பஷ்டமாகக் காணாநிற்கச் செய்தேயும் மீண்டும் அதனையே கொள்ளும்படியாக இப்படியும்; ஒரு தமோகுணம்வந்து மூடுமோவென்று ஆழ்வார் வியக்கிறார். தமஸ் என்னும் வடசொல் தமமெனத்திரிந்தது.

English Translation

Great wealth kindles raging fires of desire, then wraps the world in a cover of darkness all around. Benevolent gem-hued Lord, what ways are these? Wean me by your grace, and gift me your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்