விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாம் ஆறும் கெடும் ஆறும்*  தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,* 
    ஏமாறிக் கிடந்து அலற்றும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 
    ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்*  அரவு அணையாய்! அம்மானே,* 
    கூமாறே விரைகண்டாய்*  அடியேனை குறிக்கொண்டே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சாம் ஆறும் - திடீரென்று மரண மடைவதும்
கெடும் ஆறும் - பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக)
தமர் - தாயாதிகளும்
உற்றார் - உறவினர்களும்
தலைத்தலைப்பெய்து - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து, இப்படி இவர்கள் படுகிறதுக்கங்களைப் போக்கியருளமாட்டாயாகில, என்னையாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக்கொண்டருளவேணுமென்கிறர். சாமாறும்-வெகுநாளைக்கு ஜீவித்திருக்கப்போகிறதாகப் பாரித்திராநிற்கையில் இடி விழுந்தாற்போலே திடீரென்று ஸம்பவிக்கிற மரணமும். இவ்விடத்தில் “***” = ராத்ரிர் கமிஷ்யதி பவிஷ்;யதி ஸீப்ரபாதம் பாஸ்வாநுதேஷ்யதி ஹஸிஷ்யதி பங்கஜஸ்ரீ:இ இத்தம் விசிந்தயதி கோகதே த்விரேபே ஹாஹந்த! ஹந்த! நலிநீம் கஜ உஜ்ஜஹார.” என்கிற ச்லோகம் காணத்தக்கது. (இதன் கருத்து.) ஒரு வண்டானது மாலைப்பொழுதில் ஒரு தாமரை மலரினுள்ளே புகுந்து மதுப்பருகத்தொடங்கியது; ஸூரியன் அஸ்தமித்தலாறே மலர்மூடிக் கொண்டது; இரவெல்லாம் வண்டு அதனுள்ளேயே கிடக்கவேண்டியதாயிற்று; கிடக்கும்போது, இரவுகழிந்து பொழுது விடியப் போகியதென்றும் தாமரை மலரப் போகிறதென்றும், உடனே கிளம்பிச்சென்று குடும்பங்களோடே சேர்ந்து களிக்கப்பெறலாமென்றும் பாரித்துக்கொண்டிருந்தது; இருக்கையில், ஒரு காட்டானை திடீரென்று அத்தாமரையோடையிலிறங்கி அனைத்தையும் வேர் பறியாகப்பறித்துக் கபளீகரித்திட்டது என்கை. இந்தக்கணக்கிலே மனிசர்களுக்கு நேரும் மரணத்துன்பங்களும் பலபல.

English Translation

Kith and kin heap destruction and death, cheat each other, fall and weep; what ways are these? O Lord on serpent couch, I see no way for myself. Heed my prayer, find a way and call me unto you, quick!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்