விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார் அணிந்த முலை மடவாய்!*  வைதேவீ! விண்ணப்பம்* 
    தேர் அணிந்த அயோத்தியர்கோன்*  பெருந்தேவீ! கேட்டருளாய்*
    கூர் அணிந்த வேல் வலவன்*  குகனோடும் கங்கைதன்னிற்* 
    சீர் அணிந்த தோழமை*  கொண்டதும் ஓர் அடையாளம்*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வார் அணிந்த - கச்சை அணிந்த
முலை - முலையையும்
மடவாய் - மடப்பத்தையுமுடைய பிராட்டீ!
வைதேவீ - விதேஹ வம்சத்திற் பிறந்தவனே!
விண்ணப்பம் - ஒரு விஜ்ஞாபகம்;

விளக்க உரை

இராமபிரான் ஏகதார வ்ரத்முடையனாதலால் அப்பெருமானுக்குச் சிறுதேவியர்பலரும் பெருந்தேவி யொருத்தியுமில்லை யாதலால், “பெருந்தேவி” என்பதற்கு, பெருமைக்குத்தக்க தேவியென வுரைக்கப்பட்டது. இராமபிரான் மனைவியுடனும் தம்பியுடனும் அயோத்தியை நீங்கிக் கங்கைத் துறை சேர்கையில், கங்கையில் ஓடம் விடுபவனும், ஆயிரம் ஓடத்திற்குத் தலைவனும், கங்கைக்கரையிலுள்ள ச்ருங்கிபோபுரத்திற்கு அதிபதியும், வேடர் தலைவனுமான குஹப்பெருமாள் இராமனைக் காணும்பொருட்டுக் காணிக்கைகளுடன் அருகில்வந்து சேர்ந்து வணங்கி நிற்க, ஸ்ரீராமன் அவனது பக்திபாரவச்யத்தைக்கண்டு மகிழ்ந்து “என் மனைவியான இந்தச் சீதை உன் தோழி, என் தம்பியான இவ்விலக்குமணன் என் தம்பியே, நீ எனது உயிர்த்தோழன்; இதுவரை நாங்கள் உடன்பிறதோர் நால்வராயிருந்தோம், இன்று உன்னுடன் ஐவராயினோம்” என்று ஒற்றுமை நயந்தோன்றக் கூறினமையை இதனால் அடையாளமாகக் கூறினன். “ஏழையேதலன் கீழ்மகனொன்னாதிரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து, மாமழைமான்மடநோக்கியுள்றோழி உம்பி எம்பியென்றொழிந்திலையுகந்து, தோழன் நீ யெனக்கிங்கொழியென்ற சொற்கள்” என்ற பெரியதிருமொழியுங் காண்க. “சீரணிந்த தோழமையைக்கொண்டதும்” என்றுஞ்சிலர் பாடங்கூறுவர்.

English Translation

Lady with corseted breasts! Fit Queen to the King of Ayodhya decked with chariots! Vaidehi! Pray hear my submission: my Lord be friended the spear-wielding Guha on the banks of the Ganga. This here is another proof.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்